2019 வருட ராசிபலன்: துலாம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி , விசாகம் 1,2,3 பாதம் முடிய) :

thulam rasi - 2026

இந்த வருடம் உங்களுக்கு பொற்காலம் எனலாம், சனிபகவான் 3ல் , குருபகவான் 2ல் இருந்து கொண்டு அளப்பறிய நன்மைகளை செய்கிறார்கள், எதிலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். மார்ச் 2019க்கு பின் ராகு பெயற்சியும் உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலை, தொழிலில் ஆதாயம், பணப்புழக்கம் தாராளம், புதிய தொழில் தொடங்குவோருக்கு ஏற்ற காலம், அதிகப்படியான லாபங்கள் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும், சிலருக்கு புது மனை புகும் நிலை இருக்கும், செல்வ வளம் பெருகுவதால் சாதாரணமாக இருப்பவர் கூட இந்த வருடம் கோடீஸ்வரர் ஆகும் நிலை உண்டாகும். உங்கள் இஷ்ட தெய்வத்தை ப்ரார்த்தனை செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியம்:

சனி பகவானும் கேதுபகவானும் இணைந்து மார்ச்சுக்கு பின் நேர்மறை சக்திகளை கொடுப்பதால் நல்ல ஆரோக்கியம் இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் முற்றிலுமாக நின்று விடும். உங்கள் ஆரோக்கியம் மட்டுமல்ல குடும்பத்தினர் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மருத்துவ செலவு செய்வது குறையும். செயல்களில் புத்துணர்ச்சி இருக்கும். உங்கள் முகம் மற்றவரை இழுப்பதாக இருக்கும். மற்ற கிரஹங்களும் பெரும்பாலும் சாதகமாக இருப்பதால் தேக ஆரோக்கியத்தில் நல்ல நிலை தொடரும்.

உறவுகள்:

குடும்பத்தில் மரியாதை உயரும், உறவினர்களிடம் செல்வாக்கு இருக்கும். இதுவரை இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகூட காணாமல் போய்விடும். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயலுக்கு ஊக்கம் அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இந்த வருடத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். புதிய உறவுகளால் செல்வம் சேர்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள் அவர்களுக்கு நல்ல சூழல் உண்டாகும். பெற்றோர்களிடத்தில் அதிக பிரியம் ஏற்படும். சகோதர வகையும் மனைவி வழி உறவுகளும் உங்கள் மேல் ஆசையும் அதிக அக்கறையும் எடுத்து கொண்டு உங்கள் முயற்ச்சிக்கு பக்க பலமாக இருப்பர்.

உத்தியோகம்:

இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி பெரிய வளர்ச்சியை உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் இருந்து உங்களின் நீண்டகால கனவை நிறைவேற்றுவார். பதவி உயர்வு சம்பள உயர்வு என்று கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தி ஆகும். வெளிநாட்டு வேலை வேறு வேலை என்று முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் கிடைக்கும், வருமானம் பெருகி உங்களது அந்தஸ்து உயரும். உடன் வேலை செய்வோர் அனுகூலமாக இருப்பர். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும்.

தொழில்/வியாபாரம்:

குரு பகவான் 2ல் சஞ்சரிப்பதால் தொழிலில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். புதிதாக தொழில் தொடங்கி இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பர், சனி ராகு கேதுவும் உங்களுக்கு சாதகமான நிலையை கொடுக்கின்றன. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் அகன்று புது பொலிவு பெறுவீர்கள். புதிய வர்த்தக விரிவாக்கத்தை செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். ஏற்கனவே இருந்த கடன்கள் விரைவில் அடைபட்டு சேமிப்பு அதிகமாகும். இந்த வருடத்தில் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கலைஞர்கள்:

சினிமா, மீடியா போன்ற துறைகளிலில் இருப்பவர்களுக்கும் சரி மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் சரி இது பொற்காலம், வாய்ப்புகளை கெட்டியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும், அரசின் பாராட்டு விருது கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கேளிக்கைகளில் மனம் செல்லும். சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள். கஷ்டங்கள் என்பது மிக குறைவாகவே இந்த வருடம் இருக்கும்.

அரசியல்வாதிகள் :

மக்கள் செல்வாக்கு உயரும் நேரம் இது, தேர்தலில் நிற்பவர்கள் ஜெயிப்பார்கள், தொண்டர்களின் ஆதரவு பலமாய் இருக்கும், பதவி தேடி வரும், பணப்புழக்கம் மிக தாராளம், கட்சி மேலிடம் உங்களுக்கு ஒரு உயர்ந்த நிலையை தரும், புது வீடு சொத்து வாங்குவீர்கள். சகல வழிகளிலும் பணம் வரும். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

மாணவர்கள்:

12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று பேர் பெறுவார்கள், விரும்பிய பாடம் கிடைக்கும், மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவர், வெளிநாட்டு படிப்பும் சிலருக்கு கைகொடுக்கும், ஸ்காலர்ஷிப் மாதிரியாக கூட சிலருக்கு கிடைக்கும். போட்டி பந்தயங்களில் விருதும் பாராட்டும் கிடைக்கும், பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள், நினைத்த விஷயங்கள் நடந்து மகிழ்ச்சியை அதிக படுத்தும்.

விவசாயிகள்:

விளைச்சல் அதிகரிக்கும் காலம் இது, புதிய பயிர்களை முயற்சித்து அதில் வெற்றியையும் பெறுவீர்கள். வழக்குகளில் சாதக நிலை உண்டாகும், மகிழ்ச்சி பெருகும். கால்நடைகளும் லாபத்தை தரும், புதிய சொத்து வாங்குவீர்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

பெண்கள்:

இந்த வருடம் மிக சிறப்பான வருடம் குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம், பழைய பிரச்சனைகள் தூர விலகல், குடும்ப யாத்திரைகள் புனித யாத்திரைகள் செல்லும் பாக்கியம், உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான நிலை, திருமணத்துக்கு வரன் தேடிக்கொண்டிருப்போருக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடுதல் 2ல் இருக்கும் குருவால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உழைக்கும் மகளிருக்கு தங்கள் எண்ணங்களை நிறைவேற்றி கொள்வதில் வெற்றி கிட்டும் எதிர்பார்த்த பொருளாதார வசதிகள் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை உண்டாகும்.

வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:

கண்ணனை வணங்குகள் கீதை படியுங்கள், பகவான் க்ருஷ்ணன் ஸ்தோத்திரங்களை படியுங்கள், உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள், முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories