2019 வருட ராசிபலன்: விருச்சிகம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

விருச்சிக ராசி(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய) :

இந்த வருடம் பெரிய ரிஸ்க் எதையும் எடுக்க வேண்டாம் புதிய முயற்சிகளையும் தள்ளி போட்டு விட்டு உங்கள் இஷ்டமான தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது, ஏழரை சனியின் தாக்கம் ஜென்ம குருவால் அதிகரிக்கும், மேலும் மார்ச் 2019க்கு பின் ராகு 8லும் , கேது 2லும் வந்து இன்னும் சிரமத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிக்கனமாக இருப்பது நல்லது பொருளாதார நிலை மந்தமாகும். குடும்ப நிதி நிலமை சுமார். பகவன் நாமத்தை சொல்வது ஸ்தோத்திரங்களை கேட்பது நலம் தரும்.

உடல் ஆரோக்கியம்:

இந்த வருடம் ஜென்மத்தில் குரு இருப்பதாலும் மார்ச்சில் 8ல் ராகு வருவதாலும் உடல் படுத்தல் அதிகரிக்கும், சின்னசின்னதாக கூட ஆரோக்கிய கேடுகள் இருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது. நடுவில் ஏப்ரலில் குரு 2ல் பெயர்வதால் ஆகஸ்ட் வரை பின் நவம்பர் 4ம் தேதி முதல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம். முடிந்தால் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லுங்கள்.

உறவுகள்:

உங்கள் பெற்றோர், மனைவி/கணவர் சகோதரர்கள், பிள்ளைகள் என்று அனைவருடனும் ஏதோ ஒருவிதத்தில் மன கசப்பு ஏற்படும், உறவினர்கள் விரோதியாக மாறி சதி செய்வர், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம் உங்களை பெரியதாக பாதிக்கும், பிள்ளை/பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தால் விரோதிகளால் அது தடை படும். மிகுந்த சிரமங்களை அனுபவிக்க நேரிடும். மௌனியாக இருப்பது நல்லது வீண் வாக்குவாதம் வேண்டாம் மன அழுத்தம் ஏற்படலாம் கணவன் மனைவி மற்றவர்களிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும்.

உத்தியோகம்:

முன்னேற்றம் என்பது குறைவு, கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகள் திருப்தியுற மாட்டார்கள். எதிரிகள் கை ஓங்கும், எதிலும் கவனமாய் இருத்தல் அவசியம், பதவி உயர்வு என்பது கிடைப்பதில் இழுபறியாக இருக்கும், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு விசா போன்ற பிரச்சனைகள் வரலாம், மார்ச்சுக்கு பின் அல்லது செப்டம்பரில் வேலை பறிபோகும் நிலையும் தாய்நாடு திரும்பும் நிலையும் உண்டாகும். புதிய வேலை கிடைப்பது துர்லபமாக இருக்கும். ஜீவன ஸ்தானத்துக்கு ராகுவின் பார்வை இருப்பதால் கஷ்ட ஜீவனம் நடக்கும். நவம்பர் 4 வரை பொறுமையாகவும் இறைபக்தியுடனும் இருப்பது நலம் தரும். அதன் பின் தான் முன்னேற்றம்.

தொழில்/வியாபாரம்:

மிகுந்த சவால்களையும் போட்டிகளையும் சந்திக்க வேண்டும், எதிரிகள் உங்களை அழிக்க பார்ப்பர், கூட்டுத்தொழிலில் இருப்பவருக்கு பார்ட்னர் விலகலாம் அல்லது உங்களை விலக்கலாம். பண நெருக்கடி இருக்கும், தொழில் மந்தமாகும், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நவம்பர் 4க்கு பின் மிகுந்த நல்ல சூழல் உண்டாகும். மறுபடியும் முன்னேற்றம் வரும்.

கலைஞர்கள்:

நவம்பர் 4 வரை சோதனைக்காலம் தான் கவனமாக இல்லாவிடில் பணம் பாழாகும், வாய்ப்புகள் தட்டி போகும், பெரிய ஒப்பந்தங்கள் வராது, திரை துறை, மீடியா போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு வருமான குறைவும் வேலை இழப்பும் கூட உண்டாகும். உடன் இருப்பவரால் பிரச்சனை உண்டாகும். மன அமைதியை குலைக்கும்படியாக பிரச்சனைகள் உருவாகும்.

அரசியல்வாதிகள்:

பொறுமை அவசியம், தொண்டர்களை தக்க வைக்க அதிக பணம் செலவழிக்க நேரிடும். எதிரிகளால் கட்சி மேலிடத்தில் செல்வாக்கு குறையும். சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த வருடம் தேர்தலில் நிற்க வாய்ப்புகிடைத்தால் ஒதுங்கி கொள்வது நலம் தரும். நவம்பர் 4க்கு பின் தான் நல்ல நிலை உண்டாகும்.

மாணவர்கள்:

ஜென்ம குரு உடல் நலத்தை பாதித்து படிப்பில் அக்கறையை குறைப்பார். நெருங்கிய நண்பர்கள் பிரச்சனையை உண்டாக்குவர். படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். போட்டி பந்தயங்களில் வெற்றி துர்லபம். ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடப்பது உத்தமம். தவறான நண்பர் சேர்க்கையால் தவறான பழக்கத்துக்கு அடிமை ஆகலாம். வருடக்கடைசி மாதம் முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகள்:

பயிர்கள் எதிர்பார்த்த பலனை தராது. மகசூல் குறையும், பண நெருக்கடி உண்டாகும். கால்நடைகளும் மருத்துவ செலவை வைக்கும், குடும்ப சூழலும் சரியில்லாமல் போகும், கடன் தொல்லைக்கு ஆளாக நேரிடும். வழக்குகள் தாமதம் ஆகும் புதிய வழக்குகளிலும் சிக்கி கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நலம் தரும்.

பெண்கள்:

விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும், உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். வார்த்தைகளை குறைத்து மௌனமாக இருப்பது நல்லது குடும்ப உறவுகளுடனும் அக்கம்பக்கத்தாரோடும் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையில் பிரிவு உண்டாகலாம். ஏற்கனவே விவாகரத்து வழக்கு இருக்கும் பெண்கள் அதில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இழுத்தடித்து கொண்டிருக்கும், திருமணம் தள்ளி போகும், உழைக்கும் மகளிருக்கும் இது சிரம காலம் பொறுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் 4.11.2019க்கு பின் நல்லகாலம் பிறக்கிறது.

வணங்கவேண்டிய தெய்வம் ப்ரார்த்தனைகளும்:

சனீஸ்வரனை வணங்கவேண்டும் ஆஞ்சநேயரை சேவிக்க வேண்டும், ராம நாமத்தை சொல்வது பலன் தரும், சனீஸ்வரனுக்கு எள்விளக்கு ஏற்றவும், ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்று சொல்வது நல்லது. ஊனமுற்றோருக்கு உதவி செய்வதும் அன்னதானம் செய்வதும் பலவிதமான நன்மையை தரும்.

.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.