காங்கிரஸ் தலைவர்களின் ஹதராஸ் டிராமா ஏன் எடுபடவில்லை!

உரத்த சிந்தனை
up-yogi
up-yogi

உத்திர பிரதேசத்திலே ஹதராஸ் டிராமா ஏன் எடுபடவில்லை? யோகியின் மீது மக்கள் ஏன் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்?

போனவாரம் ஒரு கற்பழிப்பு சம்பவத்தை வைத்து இந்த தேசதுரோக நாசகார கும்பல் எப்படியெல்லாம் சாதிவெறியை தூண்டிவிட முயன்றது என பார்த்தோம் ஆனால் உத்திரபிரதேச மக்கள் ஏன் அந்த முயற்சியை கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. யோகியின் அரசு அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருக்கிறது.

யாராக இருந்தாலும் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அங்கிருக்கும் மக்களே ஒப்புக்கொண்டு பாராட்டி பேசிவருகிறார்கள்.

போனமாதம் தான் இதே கட்சிகள் ஒரு பிராமண ரவுடியை காவல்துறை சுட்டுக்கொன்றுவிட்டது அங்கே பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. மற்றசாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என பொங்கினார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

இப்போதெல்லாம் ரவுடிகள் ஜாமீன் கேட்பதில்லை தப்பி ஓடுவதில்லை தானாக வந்து சரணடைந்துவிடுகிறார்கள். இந்த மாற்றம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரும் மாற்றம். முன்பு எந்த சாதிக்கட்சி ஆட்சியிலே இருக்கீறதோ அந்த சாதிக்கட்சி ஆட்கள் ரவுடித்தனம் செய்வார்கள் இப்போது அப்படியில்லை. சாதாரணமக்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் இருக்கிறது.

இந்த குற்றத்தை ஒடுக்குதல் நடவடிக்கை வெறுமனே கைது, என்கவுண்டர் என இருப்பதில்லை. குற்றம் செய்த நபரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதற்கான செலவும் அந்த குற்றவாளியிடத்தே வசூலிக்கப்படுகிறது.

நாட்டில் முதல்முறையாக கலவரம் செய்த கலவரக்காரர்களின் பெயரையும் படத்தையும் நகரின் நடுவிலே பிளக்ஸ்பேனர் அடித்து வைத்து யார் யார் எவ்வளவு தண்டம் செலுத்தவேண்டும் என செய்தார் யோகி மகராஜ்.

அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனபோது உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கி அதற்குள் சட்டம் கொண்டு வந்து அந்த பேனர்களை அப்படியே வைத்து கலவரக்காரர்களின் சொத்துக்களை ஏலம் விட்டார்.

இப்போது இதையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். பெண்களை ஈவ்டீசிங் செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து உள்ளார்.

  • பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.