
நியூஸ் ரூம்
மீத்தேன் வாயு இந்தியாவில் 32 இடங்களில் எடுக்கப்படுகிறது. குஜராத்தில் 5 இடங்களில் எடுக்கப்படுகிறது.
ஜீனியர் விகடனில் ஒரு கேள்வி ” ஏன் இந்த மீத்தேனை தமிழகத்தில் எடுக்க வேண்டும் ? அவர்கள் ஆளும் குஜராத்தில் எடுக்கலாமே?”
இதற்கு கழுகார் பதில் ,
” இந்தக் கேள்வியை உங்கள் ஊருக்கு வரும் பா.ஜ.க.காரர்கள் சட்டையைப் பிடித்து கேளுங்கள் !”
@
கல்கியின் ஒரு பக்கத்தில் GSTகுறித்து ஒரு பக்க கட்டுரை. வாஜ்பாய் காலத்தில் இருந்து GST பற்றி விவாதிக்கப்பட்டு இப்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது.
அடுத்த பக்கத்தில் வெளியான கேள்வி பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் ” GST யை இவ்வளவு அவசரமாகக் கொண்டுவர அவசியம் என்ன!”
18 ஆண்டுகள் விவாதாம் அவசரமாம்.
@
2014 தேர்தல்.
அதற்கு முன் இந்து தமிழில் மோடிக்கு எதிராக இந்து ராம் என்பவரால் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் ஒரு கட்டுரையில் சில வரிகள் ,
” மோடி வந்த பின் குஜராத் முன்னேறியுள்ளது என்று சொல்கிறார்கள் “
எப்படி ? பணவசதியுள்ள ஒரு பத்திரிக்கை பங்குதாரர்
” சொல்கிறார்கள் ” என எழுதுகிறார். நேரிடையாக இவர் அங்கேயே சென்றிருக்கலாமே..? விசாரித்திருக்கலாமே…?
@
நியூஸ் 18 னில் இருந்து சிலர் வெளியேற்றப்படவும் பிரபல நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் ஒரு பதிவிடுகிறார் . அதில் ,
“எந்த வித பின்புலமும் இல்லாத நக்கீரன் கோபால் ஜெயலலிதாவுக்கு எதிராக..” என்று எழுதியிருந்தார்.
அதற்கு பின்னூட்டமாக ,
” நக்கீரன் கோபாலுக்கு உண்மையாகவே எந்த பின்புல ஆதரவும் இல்லையா ?” என சில நிகழ்வுகளைச் சொல்லி கேள்வி எழுப்பி இருந்தேன்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் எனது பின்னூட்டம் டெலிட் செய்யப்பட்டிருந்தது.
@
தமிழக ஆளுநருக்கு மாணவிகளை சப்ளை செய்யும் தரகராக பேராசிரியை நிர்மலா இருந்தார் என வளைத்து வளைத்து எழுதினான் நக்கி கோபால்.
இரண்டு வருடம் கழித்து சாகவாசமாக. ..எனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் அவ்வாறு எழுதினேன். இப்போதுதான் தெரிந்தது அது உண்மையில்லை என்று ஆளுநரிடம் நேரில் தெரிவித்தானாம். இதற்கு ஏற்பாடு செய்து உடன் சென்றவன் அர்பன் நக்சல் இந்து ராம்.
@
ஏன் இப்படி இவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பொய் புரட்டுகளை எழுதி தங்களுக்கு பிடிக்காத அரசுகளுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறார்கள்.?
பயம் இல்லை .
அதனால் நயம் இல்லை.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள் நம் முன்னோர்கள்.
இவர்களை அடக்குவதும் ஜனநாயகம்தான்.ஒவ்வொரு பொய்ச் செய்திக்கும் ஒரு கோடி அபராதம் என சட்டம் வந்தால்தான் இவர்கள் அடங்குவார்கள். இப்படி இவர்களது பொருளாதாரத்தில் அடிக்காமல் வழக்கு பிணக்கு என்றிருந்தால் அது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல்தான்.
— வாட்ஸ்அப் வைரல் பகிர்வு