
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவிலில், வேட்டைப்பெருமாள் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பழங்கள், இளநீர், சந்தனம் விபூதி, அரிசி மாவு, மஞ்சள் , திரவியம், உள்ளிட்ட அபிஷேகங்கள் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் செய்யப்பட்டன.

பின்னர் நடராஜர் வெள்ளி அங்கி மலர் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
இதேபோன்று பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள வேட்டைப் பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையொட்டி சிறப்பு ருத்ரஹோமம் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது
இதில் கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை, லெட்சுமிபூஜை . மற்றும் சிறப்பு ஹோமம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.

தொடர்ந்து நடராஜருக்கும்,சிவகாமி அம்பாளுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் தீபா ஆராதனை நடைபெற்றது
நிகழ்வில் முன்னாள் எம் எல் ஏ நெடுஞ்செழியன் எ ஸ் வி எ ஸ் மோட்டார்ஸ் ஜெயக்குமார் புதுக்கோட்டைஜோதிடர் டாக்டர் கே.வி.செல்வராஜ் ,சுந்தரம் சிவனடிகளார் அண்ணாமலை பட்டிமன்ற பேச்சாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
- செய்தி: டீலக்ஸ் சேகர் , புதுக்கோட்டை