
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தனி நபர்கள் 2019 – 2020 ஆம் நிதி ஆண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 29 ஆம் தேதி நிலவரப்படி 4 கோடியே 54 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.
முன்னதாக இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப் பட்ட நிலையில், மூன்றாவது முறையாக நீட்டிக்கப் பட்டு, தனி நபர்கள் 2021 ஜனவரி 10ஆம் தேதி வரை தங்களுடைய கணக்கை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
அதே நேரத்தில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய, அல்லது சர்வதேச நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பிற வரி செலுத்துவோர்களுக்கு வருமான வரி கணக்கை தாக்க செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனங்களுக்கும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி தணிக்கை அறிக்கையை வழங்குவதற்கான கால அவகாசமும் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.