annamalai tweet about punjab incident - 2026

சன்னி டூ டிஜிபி.,! டிஜிபி., டூ எஸ்பி.,! அதுசரி… சன்னிக்கு உத்தரவிட்டது யார்?!

உரத்த சிந்தனை Featured அடடே... அப்படியா?
annamalai tweet about punjab incident - 2026

-> கருத்து: – செல்வநாயகம்


பிரதமர் மோதி – பஞ்சாப் பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரம் இப்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் மெற்பார்வையில் இருக்கிறது.

இவ்வேளையில், இண்டியா டுடே இன்று, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளுடன் தான் பேசி நடத்திய ஸ்டிங் வீடியோவை வெளியிட்டுள்லது!

அதில், “பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி எங்கள் மேலதிகாரிகளுக்கு எடுத்துச் சொன்னோம். போராட்டக்காரர்கள் விவசாயிகள் இல்லை, அவர்கள் தீவிரவாதிகள் (radicals) என்று எடுத்துச் சொன்னோம். மேலதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை” உள்ளிட்ட பல விவரங்கள் வந்துள்ளன.

“இந்த ஸ்டிங் வீடியோ தெளிவாக காட்டுகிறது, பஞ்சாப் காங்கிரஸ் அரசின் திட்டத்தை (கைரேகைகளை). இதைத் தான் நாங்கள் சொல்லி வந்தோம்” என்று அண்ணாமலை ட்வீட் செய்திருக்கிறார்.

*** காங்கிரஸ் அடிமை இண்டியா டுடே இந்த ஸ்டிங் செய்தது அதிசயத்திலும் அதிசயம்!

இதற்கிடையில், நேற்று நீதிமன்றத்தில், “பிரதமர் பாதுகாப்பு குறித்து குழு அமைத்து விசாரிக்கவும்” என்ற வழக்கறிஞர் ஒருவரின் பொது நல மனுவில், “நீதிமன்றம் குழு அமைத்து விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று மத்திய அரசு சொன்னது. பஞ்சாப் பாவாடை அரசு, “மத்திய அரசின் விசாரணை குழுவில் எங்களுக்கு இல்லை. நீதிமன்றமே விசாரிக்கவும்” என்று சமர்ப்பித்தது. நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது – ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில். என்.ஐ.ஏயும் அதில் உண்டு.

“எங்கள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் எங்கள் கடமையை ஒழுங்காக செய்தோம்” என்ற பஞ்சாப் அரசு, தன் டிஜிபி முதல் பல காவல்துறை அதிகாரிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒழுங்காக செய்திருந்தால் அவர்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

ஹெலிகாப்டரில் பயணப்பட வேண்டிய பிரதமர் வானிலை காரணமாக சாலை வழியாக பயணிக்கிறார் என்ற விஷயம் எப்படி லீக் செய்யப்பட்டது?

பிரதமர் வரும் வழியில் இருக்கும் குருத்துவாராவிலிருந்து ‘போராளிகளுக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, “வந்து சாலையை மறியுங்கள்” என்று. இன்னும் என்னென்ன திட்டம் என்பது தெரியவில்லை. நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.

அந்தப் பகுதி எஸ்.பிக்கு கசிய விட்டது டிஜிபி. டிஜிபிக்கு உத்தரவிட்டது பாவாடை சன்னி. சன்னிக்கு உத்தரவிட்டது யார்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.