spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉள்ளிருந்தே இந்தியாவை அழிக்கத் துடிக்கும் வைரஸ்

உள்ளிருந்தே இந்தியாவை அழிக்கத் துடிக்கும் வைரஸ்

- Advertisement -
pfi

கடந்த வாரம் மங்களூரு பகுதியில் நடந்த பாஜக (இளைஞரணி) யுவ மோர்ச்சா நிர்வாகி பிரவீன் படுகொலை நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் உடன் இருந்த நண்பர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மத நோக்கத்தில் இந்த படுகொலைக்கு உடந்தை என்று கூறப்பட்டது. அந்த நபர் பிஎஃப்ஐ உறுப்பினர் என்றும் எஸ்டிபிஐ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் என்றும் அந்த நபரின் மனைவி கூறினார். இதுவும் சமூக தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காண்க: https://www.indiatoday.in/india/story/karnataka-naveen-nettaru-bjp-worker-murder-accused-pfi-member-wife-reveals-1981080-2022-07-28

praveen 1

ஏற்கனவே கேரளத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பி எஃப் ஐ மீது கேரளத்தில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சமூக தளங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

உள்ளிருந்தே இந்தியாவை அழிக்கத் துடிக்கும் வைரஸ் – PFI

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக திசைதிருப்பி நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பது, பணமோசடி, அரசியல் கொலைகள், சட்டவிரோத மத மாற்றங்கள், இட்டுக்கட்டப்பட்ட காரணங்களுக்காக கைகளை துண்டித்தல், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்ற காரணங்களுக்காக பிஎஃப்ஐ.,யின் பெயர் செய்திகளில் அடிக்கடி வருவது வழக்கம். 

நோர்டிக் மானிட்டர் ( https://nordicmonitor.com ) என்ற ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுமம் 2018 ஆம் ஆண்டு PFI மற்றும் துருக்கியின் பயங்கரவாத அமைப்பான ஐஎச்எச்(IHH) உடனான சந்திப்பை பதிவு செய்ததன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் PFI யின் சதித் திட்டம் முதலில் வெளிச்சத்திற்க்கு வந்தது, காண்க: https://nordicmonitor.com/2020/11/turkish-govt-backed-charity-ihh-spreads-wings-to-india-forges-alliance-with-militant-pfi/

இந்த சர்வதேச சதித் திட்டத்தின் தொடர்ச்சியாக PFI மற்றும் சீனாவின் தொடர்பு மேலும் அதிகரித்து வருவதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளன.

அமலாக்கத்துறை அண்மையில் PFI மற்றும் சீனா உடனான உறவு பற்றிய ஆதாரங்கள் சிலவற்றை ஜூன் மாதம் வெளியிட்டது. தற்பொழுது பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் PFI, சீனாவிடம் வர்த்தகம் என்ற பெயரில் நிதி திரட்டியது அமலாக்கத்துறையால் கண்டுபிக்கப்பட்டது. 

இவ்வாறு சட்டவிரோதமாக திரட்டப்பட்ட நிதியை டெல்லி கலவரம், பாபரி மஸ்ஜித் குறித்த துண்டு பிரசுரம் மூலம் மத உணர்வுகளை தூண்டுதல், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற செயல்களுக்காக பயன்படுத்தியதற்கு அமலாக்கத் துறை PFI மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

PFI யின் மாணவர் அணித் தலைவர் கே.ரவுப் ஷெரீஃப் மீதான விசாரணையில் PFIக்கும் சீனாவுக்குமான உறவு பற்றிய முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்தன. மேலும் ரவுஃப் ஷெரீஃபிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல கோடி ரூபாய் சீனாவிடம் இருந்து திரட்டியது  தெரியவந்தது. ஷெரீஃப்  2019-2020 ஆகிய காலகட்டங்களில் சீனா சென்றதும், அதே காலகட்டங்களில் அவரின் இந்திய வங்கிக் கணக்கில் சீனாவில் இருந்து பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. காண்க: https://www.indiaherald.com/Politics/Read/994507263/Kerala-to-Kanpur-China-destabilizes-India-via-PFI

ரேஸ் இண்டர்நேஷனல் (Race International LLC) என்னும் ஓமன் நாட்டு நிறுவனத்தில் ஷெரீஃப் பணி புரிந்துவந்தார். அந்த நிறுவனத்தில் உள்ள நான்கு இயக்குனர்களில் இரண்டு பேர் சீனர்கள். மற்ற இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள். 

அதுமட்டுமின்றி க்லீம் பாஷா (Kaleem Pasha) என்ற எஸ்டிபிஐ உறுப்பினர் Jumpmonkey Promotions Pvt Ltd என்ற சீன நிறுவனத்திடம் இருந்து லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் PFI செய்து வரும் சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளின் ஒரு சிறு பகுதியே என்கிறது அமலாக்கத்துறை. 

PFI யின் இவ்வாறான சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்காக துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஒரு குழுவையே வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்  அமலாக்கத்துறையின் விசாரணையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.     

ஹத்ரஸ் கலவரத்தை தூண்டியதன் காரணமாக உத்தரப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான், பெங்களூர் கலவரத்திற்க்கு மூளையாக செயல்பட்ட க்லீம் பாஷா  போன்றவர்களுக்கு பண உதவி செய்தது ரவுப் ஷெரீஃப் என்பது தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க அயராது பாடுபட்டு வரும் PFI மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சீனாவின் இந்திய விரோதக் கொள்கைகள் பற்றி இந்தியர்கள் அனைவரும் அறிவார்கள்.. 1962 இந்தியா சீனா போர் முதல் கல்வான் மோதல் வரை இந்தியாவின்  பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியர்களிடையே சின்னச்சின்ன வேற்றுமைகள்  இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சீனாவை பல முறை வீழ்த்தியுள்ளதை கடந்த கால வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தற்பொழுது PFI சீனாவிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஹத்ரஸ் பெங்களூர் கலவரம் போன்றவற்றை அரங்கேற்றுகிறது என்று கூறப்படும் தகவல்கள் அதிக கவனம் கொள்ள வேண்டியவையே. 

ஒரு போரின் முடிவு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் போர் வீரர்களைக் கொண்டு மட்டும் கணிக்க முடியாது. வெளிநாடுகளின் உதவியுடன் எதிரியின் நாட்டினுள் உள்ளிருந்து பலவீனமாக்கும் சக்திகளே போரின் முடிவைத் தீர்மானிக்கும் என்பது வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

சீனாவின் உத்தரவின் படி செயல்பட்டு வருகிறது என்று கூறப்படும் PFI, தற்பொழுது இந்திய முஸ்லிம்களின் பாதுகாவலன் என தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்கிறது. ஆனால் உய்கூர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்துவரும் சீனாவுடன் பிஎஃப்ஐ நட்பு பாராட்டுவது மிகப்பெரிய முரண்பாடுதான்!  

இப்படி ஒருபுறம் உய்குர் இஸ்லாமிய அழிப்புக்கு துணையாக இருந்து விட்டு, மறுபுறம் இந்தியாவில் நாங்கள்தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்று மார்தட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடும் PFIயை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் சமூக தளங்களில் எதிரொலிப்பதை பார்க்க முடிகிறது. PFIயின் தேசவிரோத செயல்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது படித்த ஒவ்வொரு  இஸ்லாமியர்களின் கடமை என்று இந்திய தேசியத்தில் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களே தங்கள் கருத்துக்களை சமூகத் தலங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கருத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இப்போது நம் தேசத்துக்கு எழுந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe