சீனாக்காரன் இந்தியர்களிடம் உதை வாங்கி ஓடுவதைப் பார்த்து பாகிஸ்தானிய சேனல்களில் கண்ணீர் சிந்தி, கதறியழுகிறார்கள். அடி வாங்கிய சீனனே அமைதியாக இருக்கிறான். பாகிஸ்தான்காரனுக்கு துக்கம் பொங்கி வழிகிறது.
சீனாவுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். மீண்டும் கோவிட் சீனாவிற்குள் கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. பீஜிங் போன்ற பெருநகரங்களில் வந்து குவியும் பிணங்களை எரிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்கள் தயாரித்த கோவிட் மருந்து வேலை செய்யவில்லை. அதற்கும் மேலாக பெரும்பாலான சீனர்கள் இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதால் சீனாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
கிறுக்கன் ஜின்-பிங்கின் பிடிவாதமான “ஜீரோ கோவிட் பாலிசி” காரணமாக சாதாரண சீனன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தொழிற்சாலைகள் இயங்கவில்லை. சீன இளைய தலைமுறை வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட செலவு செய்து சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்து வெளிவருகிற இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகள் இல்லை. இருப்பதெல்லாம் சாதாரண தொழிற்சாலை வேலைகள் மட்டும்தான். அதனைச் செய்ய அவன் தயாராக இல்லை. அதற்கும் மேலாக உலகமெல்லாம் சீனர்கள் வெறுக்கப்படுகிற நிலைமையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என ஏகப்பட்ட காரணங்களைச் சொல்லலாம்.
சீனா உள்நாட்டுப் பிரச்சினையில் தவிக்கிற ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு அண்டை நாட்டின்மீது படையெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தது. மாவோவின் கலாச்சாரப் புரட்சி என்கிற பைத்தியக்காரத்தனத்தால் கோடிக்கணக்கான சீனர்கள் பட்டினியால் செத்துப் போனார்கள். அதனை மறைக்க மாவோ இந்தியாமீது படையெடுத்தார். அந்தப் போரில் நேருவின் கோழைத்தனத்தால் இந்தியா தோல்வியுற நேர்ந்தது என்பதெல்லாம் பலரும் அறிந்ததுதான். அதற்குப் பிறகு 1967-இல் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்து சரியான உதைவாங்கிக் கொண்டு திரும்பி ஓடினார்கள். பிறகு வியட்நாமின் மீது படையெடுத்து பலமான அடிவாங்கினார்கள். அவ்வப்போது தைவானை மிரட்டிக் கொண்டிருப்பது சீனர்களின் பழக்கங்களில் ஒன்று….
இந்தமுறை நிச்சயமாக இந்தியாவின் மீது ஏதாவது தாக்குதலைத் தொடங்குவார்கள் என இந்தியா எதிர்பார்த்திருந்தது. அதனை முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் இந்தியா தயாராக இருந்தது. ஆனால் சீனர்களுக்கு அது உறைக்கவில்லை. தங்களிடம் இருக்கும் ஹை-டெக் ஆயுதங்களின் மீது அவர்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையிருந்தது. துரதிருஷ்டவசமாக சீன ராணுவம் ஒரு வெத்துவேட்டு என்பதனை இந்தியா சரியாகவே கணித்து வைத்திருந்தது. சீன ராணுவத்தில் பணிபுரிகிறவர்களுக்கு எந்தப் போர் அனுபவமும் இல்லை. சீனக் கிராமங்களில் இருந்து மூன்று வருட காண்ட்ராக்டில் வேலை செய்கிறவன் சீன ராணுவத்தினன். அவனது விசுவாசமெல்லாம் ஜின்பிங்கின் மீது மட்டும்தான். ஆனால் இந்திய ராணுவத்தினனோ அதற்கு நேரெதிரானவன். தன் தாய்நாட்டிற்காக வீரத்துடன் போராடுகிறவன்.
எதிர்பார்த்தது போலவே சீனன் அருணாச்சலப் பிரதேசத்திற்குள் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தயாராக இருந்த இந்திய ராணுவத்தினர் அவர்களை வெளுத்து வாங்கினார்கள். சீனன் அடிபட்டு ஓடுகிற வீடியோக்கள் இன்றைக்கு உலகமெல்லாம் பரவி சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக ஜின்பிங்கிற்கு அவமானம் என்பதால் மீண்டும் அந்த ஆள் வேறொரு இடத்தில் வாலை ஆட்டி உதைபடுகிற காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே எண்ணுகிறேன்.
தவாங்கில் வந்த ஒவ்வொரு சீனனும் அஞ்சி நடுங்கினான். அதற்குக் காரணம் இருந்தது. கல்வானில் நடந்த சண்டையில் தன்னுடைய தலைமையதிகாரி கொல்லப்பட்டதைக் கண்ட சீக்கிய சிப்பாய் ஒருவன் கையில் கிடைத்த சீனன் ஒவ்வொருவனின் கழுத்தையும் உடைத்துக் கொன்றதைக் கண்டவர்கள் அவர்கள். ஏறக்குறைய பனிரெண்டு சீனர்களின் கழுத்தை முறித்துக் கொன்றபிறகு துரதிருஷ்டவசமாக அந்தச் சீக்கிய சிப்பாயும் கொல்லப்பட்டார்..அதையெல்லாம் கண்டபிறகு எந்தச் சீனனுக்கு இந்திய சிப்பாயை எதிர்க்கத் துணிச்சல் வரும்?
தன்னுடைய மனக்கோட்டையெல்லாம் இடிந்துபோனதை எண்ணி பாகிஸ்தானி கண்ணீர் சிந்துவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
-: பி.எஸ். நரேந்திரன்