ind ban test 1 - 2026

வங்கதேசத்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்திய அணி

விளையாட்டு உலகம்
ind ban test 1 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட் – மூன்றாம் நாள் – 16.12.2022

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் 404; இரண்டாவது இன்னிங்க்ஸ் 258/2 டிக்ளேர்டு (கில் 110, புஜாரா 102, கலீத் 1-51). வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்-150 (முஷ்பிகுர் 28, மெஹிதி 25, குல்தீப் 5-40, சிராஜ் 3-20); இரண்டாவது இன்னிங்க்ஸ் விக்கட் இழப்பின்றி 42 (சாண்டோ 25, ஜாகிர் 17*). மீதமுள்ள இரண்டு நால் ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 471 ரன்கள் தேவை.

ஷுப்மன் கில் தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார். புஜாரா 52 இன்னிங்ஸ்களில் தனது முதல் சதத்தை அடித்தார், மேலும் இந்தியா இரண்டாவது இன்னிக்ஸை 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களில் டிக்ளேர் செய்ததால், சட்டோகிராமில் நடக்கின்ற முதல் டெஸ்டில் வங்கதேசத்திற்கு 513 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இன்னும் தெளிவாகச் சொல்வதனால், பத்து விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணிக்கு இரண்டு நாட்களும் இன்றைய தினத்தில் சிறிது நேரமும் இருந்தது.

பதிலுக்கு, பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர்களான நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன் ஆகியோர் இன்றைய நாள் ஆட்டத்தில் மீதமிருந்த 12 ஓவர்களை விக்கட் இழப்பின்றி சமாளித்தனர்.

குல்தீப் யாதவ், 22 மாதங்களில் தனது முதல் டெஸ்டையும், ஒட்டுமொத்தமாக எட்டாவது டெஸ்டையும் விளையாடி, தனது மூன்றாவது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திநார். நேற்று 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று காலை விளையாட வந்த வங்கதேச அணி மேலும் 17 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் இந்தியா 254 ரன்கள் முன்னிலை பெற்றது, ஆனால் அவர்கள் ஃபாலோ-ஆனை அமல்படுத்துவதற்குப் பதிலாக இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட முடிவு செய்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில், எபாடோட் களத்தில் இறங்காததால், வங்கதேசத்தின் பந்துவீச்சை காலித் அகமது மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் ஆரம்பித்தனர்.

KL ராகுல் மற்றும் கில், மெதுவாக ஆரம்பித்தாலும், முதல் 8 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே குவித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கில் ஸ்கோர் விகிதத்தை உயர்த்தினார், ஆனால் கலீத், இந்திய அணியின் ஸ்கோர் 70ஆக இருக்கும்போது அவர்களின் ஜோடியைப் பிரித்தார். கே.எல். ராகுல் கலீத் பந்தில் ஆட்டமிழந்தார்.

கலீத் புஜாராவின் உடலில் படுமாறு இரண்டு முறை பந்து வீசினார். ஆனால் அதே ஷார்ட் பந்துகளில் இரண்டை ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு அடித்த கில்லுக்கு எதிராக திட்டம் பலனளிக்கவில்லை. பின்னர், கலீத் தனது ஏழு ஓவர் ஸ்பெல்லின் முடிவில் சோர்வாக இருப்பதாகத் தோன்றியதால், புஜாராவும் அவரை நான்கு ரன்களுக்கு ஒரு புல் ஷாட் அடித்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக, கில் ஸ்வீப் ஷாட்டை நன்றாகப் பயன்படுத்தினார், அதனுடன் மூன்று பவுண்டரிகளை எடுத்தார். கில் 70 ரன் எடுத்தபோது ஒரு LBW கேட்கப்பட்டது. அம்பயர் அந்த சத்தமான முறையீட்டைப் புறக்கணித்தார். வங்கதேச அணி அதை மறுபரிசீலனை செய்யத் தேர்வுசெய்தபோது, டிஆர்எஸ் தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

தேநீருக்குப் பிறகு, கில் மற்றும் புஜாரா இன்னும் அதிக முனைப்புடன் பேட்டிங் செய்தனர். மெஹிடி பந்தில் ஒரு ரிவர்ஸ்-ஸ்வீப்ட் பவுண்டரியுடன் கில் 99 ரன்களுக்கு நகர்ந்தார், பின்னர் இரண்டு பந்துகளில் மிட்-ஆனில் ஒரு பவுன்ஸ் பவுண்டரி அடித்து சதம் அடித்தார். மற்றொரு பெரிய ஷாட்டை முயற்சிக்கும்போது அவர் 110 ரன்களுக்கு வீழ்ந்தார், ஆனால் அதன் பிறகு புஜாரா அதிரடியாக ஆடினார்.

87 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டிய புஜாரா சதம் அடிக்க இன்னும் 43 பந்துகளை மட்டுமே எடுத்தார். மறுமுனையில் விராட் கோலி கிட்டத்தட்ட ஒற்றை ரன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தார். அவரும் புஜாராவும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 73 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தனர், அதில் கோஹ்லியின் பங்கு 29 பந்துகளில் 19 மட்டுமே. புஜாரா சதம் அடித்ததும் இந்தியா தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.