photo 92 143414 8 - 2026

திருமலையானை தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது..

அடடே... அப்படியா? ஆன்மிகம் ஆலயங்கள் இந்தியா
photo 92 143414 8 - 2026

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்தது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியானது. திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் அரை மணி நேரத்தில் வெளியிடப்பட டிக்கெட் அனைத்தும் விற்பனையானதாக தெரிகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.