
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்
ஆப்ரேஷன் கெல்லர் – சுதந்திர பலூசிஸ்தான் உதயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று பாகிஸ்தானியர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக விடாமல் உளறிக் கொண்டு, கதைக்கப்பட்ட ஆதம்பூரில், இந்தியா சுதர்சன சக்கரா எனப் பெயரிடப்பட்ட ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனமான S400 நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்தார். அங்கு உள்ள ராணுவத்தினரை உற்சாகப் படுத்த, ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கச் சென்றதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மதியமே ரிபப்ளிக் ஆஃப் பலூசிஸ்தான் உதயமானதாக அங்கிருந்து அறிவித்திருக்கிறார்கள். கூடவே இந்தியா இதனை அங்கீகரிக்க வேண்டும் எனவும்… இப்படி அறிவிக்கும் முதல் நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனோடு சேர்த்து அமெரிக்காவுக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐம்பது நாடுகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் இந்தியா தங்களுக்கு துணை நின்று ஒத்துழைப்பு தந்து அங்கீகரிக்க வேண்டும்; சர்வதேச சமூகத்திடமும் எடுத்துச் சொல்லி தங்களுக்கு தனி நாடு அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இவர்களால் அடையாளப்படுத்தப்படும் பலூசிஸ்தான் என்கிற நாட்டில் கிட்டத்தட்ட பத்து மாநிலங்கள் வருவதாகவும், அதற்கு தலைநகராக குவெட்டா இருக்கும் எனவும் அவர்களுடைய தேசிய மொழியாக பலூச் இருக்கும் எனவும் இதனோடு சேர்த்து ஆறு மொழிகளுக்கு தேசிய அங்கீகாரம் உள்ளதாக அறிவித்து அசரடித்திருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் இன்று பற்றி எரிவது இந்த விஷயம்தான். அமெரிக்கா ஆடும் ஆடு புலி ஆட்டத்தில் (பாகிஸ்தானிய தேசிய விலங்கு மலை ஆடு .நம் இந்திய தேசிய விலங்கு, புலி) இந்தக் காய் நகர்வை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. இது பற்றின சர்வதேச ஊடகங்களின் கேள்விகளை நாசூக்காகத் தவிர்த்து விட்டு நகர்ந்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
இது ஒரு புறம் இருக்க ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆப்ரேஷன் கெல்லர் நம் இந்திய தரப்பில் முன்னெடுக்கப்பட்டு மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது நம் இந்திய MI எனப்படும் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் நடத்திய அதிரடி தாக்குதல் என்கிறார்கள். பாகிஸ்தானில் வைத்தே அந்த தேடப்படும் குற்றவாளிகளை அடையாளப் படுத்தப்பட்ட பயங்கரவாதிகள் மூவரை மிகச் சரியாக வேட்டையாடி இருக்கிறார்கள். இந்தப் பெயர் வெளியான போது, கெல்லர் என்பதன் உருதுப் பொருள் என்ன என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடியதாகவும் சமூகத் தளங்களில் பேசப்பட்டது.
யார் அந்த மூவர் என்பதோ, என்று, எங்கு வைத்து இதனைச் செய்தார்கள் என்பதோ விவரமாக அறிவிக்கப்படவில்லை. ஆக அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகளோடு நம் இந்திய அரசின் ஆட்டம் தொடர்கிறது. எதிரிகள் இந்தக் காய் நகர்த்தலைப் புரிந்து உள்வாங்கவே திணறுகிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இங்கே இதில் ஆடு மட்டும் பதறவில்லை அந்தக் காட்டு மாடும் தான்!





