spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபெறாத விருது... பொய்களை எழுதி... காசு பார்த்த கி.வீரமணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

பெறாத விருது… பொய்களை எழுதி… காசு பார்த்த கி.வீரமணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

- Advertisement -

பெறாத ஒரு விருதுக்கு புத்தகம் எழுதி காசு பார்த்த ஒரே கோஷ்டி நம்ம ஊர் ஓசி சோறு கோஷ்டிதான்… என்று கலாய்க்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்.!

புத்தகத்தின் பெயர் – யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் | புத்தகத்தின் விலை – 171 ரூபாய் | பக்கங்கள் – 250 | புத்தக ஆசிரியர் – கி.வீரமணி

இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பு ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு விருது கொடுத்திருப்பதாக ஒரு புத்தகத்தை கி.வீரமணி எழுதி காசு பார்த்ததாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்பவர்கள், முழுநேர ஊடகங்கள் ஈ.வே.ரா.குறித்து பொய்களையே எழுதிக் கொண்டிருக்கும். உள்ளூரில் புகைப்படம் வைத்து பேசக்கூடத் தகுதியற்ற ஒரு நபரை ஊருக்கு ஊர் சிலை வைக்கும் அளவுக்கு ஊடகங்களே எழுதித் தள்ளின.

இன்று சமூக ஊடகங்களின் தாக்கமிருப்பதால் இந்த மாதிரியான பித்தலாட்டங்கள் தெரிந்துவிடுகின்றன. ஆஸ்திரிய ஸ்டாம்ப்பு முதல் யுனஸ்கோ விருதுவரை வரலாற்றில் பதிந்திருக்க வேண்டிய சில்லுண்டித்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியதுதான் சமூக ஊடகங்களின் தாக்கம்.

வெறும் கட்டுக்கதைகளை யுனஸ்கோவின் பெயரால் எழுதி காசு சம்பாதித்த வீரமணி தன்னுடைய பொய்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சேர்த்து பொய் சொல்லி விற்ற புத்தகங்களை திரும்பப்பெற வேண்டும்… என்று கோரிக்கைகளை வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இது கருத்து யுத்தமாகவே தற்போது வெளிப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை பெரிய அளவில் கிளப்பி, சமூக ஊடகங்களில் கொண்டு சென்ற ஜகந்நாதன் என்பவர் இதனை பெரிதாக விமர்சித்துள்ளார்.

ஆங்கில விக்கிபீடியாவில் ஈவேரா தொடர்பான கட்டுரையில், ஈவேரா யுனெஸ்கோ விருது பெற்றார் என்பதற்கு யுனெஸ்கோ வலைத்தளத்தில் ஆதாரம் எதுவுமில்லை; 1998 வரையிலான யுனெஸ்கோ விருதுகள் பட்டியலில் ஈவேரா பெயர் இல்லை என்பதையும் நான் விக்கிபீடியாவிடம் தெரிவித்ததை அடுத்து விக்கிபீடியா அந்தத் தகவலை நீக்கியது. இது நடந்து ஒரு மாதத்திற்குப் பின், நேற்றுத் திராவிடர் கழக வீரமணி இதற்காக என்னையும், பிராமணர்களையும், சம்பந்தமே இல்லாமல் ரங்கராஜ் பாண்டேவையும் மறைமுகமாகத் திட்டி விடுதலை பத்திரிக்கையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதை அவரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.(அவருடைய பதிவு கமெண்டில்).

அதில் அவர் சொல்லியிருக்கும் முக்கிய விஷயம்

//யுனெஸ்கோ மன்றம் என்ற அய்.நா.வின் அதிகார பூர்வமான கிளைதான் அவ்விழாவை நடத்தியது.
சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27.6.1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர் திரிகுண சென்தான் அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியாருக்கு விருது வழங்கினார் என்பது உலகறிந்த தகவலாகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும். Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும். அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

The United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) eventually gave an award to Periyar, and the Union Education Minister Triguna Sen, in Madras (Chennai), on June 27, 1970. The citation hailed Periyar as ‘‘the Prophet of the New Age, the Socrates of South East Asia, Father of Social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners’’ என்று வெளிவந்துள்ளது.//

அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் என் பதிலடி: விஷயம் என்னவென்றால் 1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சர்வதேச கல்வி ஆண்டு என்று அறிவித்தது. அதை அனைத்து நாடுகளும் கடைபிடித்தன. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு நடத்திய விழா ஒன்றில் இந்த கேடயம் வழங்கப்பட்டிருக்கலாம். அதில் அப்போது பெட்ரோலிய அமைச்சராக இருந்த திரிகுணா சென் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கலாம். (அப்போது அவர் மத்திய கல்வி அமைச்சர் அல்ல). ஆகவே இது யுனெஸ்கோ வழங்கிய விருது அல்ல.

நீங்கள் இணைத்திருக்கும் படம் பற்றி New Indian Express செய்தியில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

//The International education year 1970 was celebrated at ‘Rajaji Hall’ with the release of ‘Kalaignar Kavimanimalai’ and the international education awards to 47 distinguished men in various fields picture shows Former Tamil Nadu CM Karunanidhi, Periyar giving away the awards to distinguished men in various fields.//

மேலும் யுனெஸ்கோ வலைத்தளத்தில் தேடினால் காந்தியடிகள், நேரு பற்றி கட்டுரைகள், நூல்கள் உண்டு. ஈவேரா பற்றி ஒரு கட்டுரை கூட கிடையாது.

முதலில் திரிகுணா சென் அவர்கள் 1970 இல் மத்திய கல்வித்துறை மந்திரியாக இருக்கவில்லை. இதுவும் விக்கிபீடியாவிலே இருக்கிறது.

இரண்டாவது யுனெஸ்கோ என்ன விருது கொடுத்ததென்று இல்லை.

மூன்றாவது 1970 இல் யுனெஸ்கோ இரண்டே இரண்டு விருதுகள் தான் கொடுத்துட்டு இருந்தது. ஒன்னு கலிங்கா விருது. இது ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் அவர்களால் அறிவியலை எல்லோருக்கும் எடுத்த செல்ல செயல்படுவர்களை கவுரவிக்கும் பரிசு. இன்னொன்று சோவியத் யூனியனால் நிறுவப்பட்ட நடேஷதா கே கிருப்ஸ்யா எனும் இலக்கிய பரிசு.  இவை எதுவும் ஈவேராவுக்கு வழங்கப்படவில்லை.

இவர் சொல்லும் Phil Zuckerman அமெரிக்காவில் பிறந்ததே 1969 ஆம் வருடம்தான். அவரும் போகிற போக்கில் செவிவழிச் செய்திகளை வைத்து எழுதி இருக்கலாம். அவரிடமும் ஏதாவது ஆதாரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியே ஏதாவது பாராட்டுப் பத்திரம் கொடுத்திருந்தாலும் அதை விருது என்று சொல்ல முடியுமா என்ன? முடிந்தால் ஆதாரத்தைக் கொடுத்து விக்கிபீடியாவில் திருத்தட்டும்.

இந்த ஆதாரமில்லாத தகவல் தமிழகக் கல்வித்துறையின் பாடப்புத்தகத்தில் வேறு இருக்கிறதாம். இந்த சர்ச்சையை ந்யூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தியாக வேறு ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

நான் ஃபேஸ்புக் மற்றும் இணையத்துக்கு எழுத வந்து செய்த சாதனை இவரைக் கதற விட்டதுதான். இவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் துணைநின்ற மற்றும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


இதைப் பற்றி Straight Line ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் எழுதியது:

உண்மையில் நாம் விசாரித்தவரையில் முதலில் ஐ.நா. என்னும் அமைப்பு எந்த தனிப்பட்ட அரசும் சாராத ஒரு பன்னாட்டு அமைப்பு. அந்த அமைப்பின் சார்பில் எந்த பரிசு விருதுகள் வழங்கப்பட்டாலும் அதை அந்த அமைப்பின் தலைவர்கள் உரிய முறையில் நேரில் வழங்குவது தான் மரபு. ஐ.நா. என்பது மரபுகளை மிகவும் தீவிரமாக பின்பற்றும் ஒரு அமைப்பு. அதன் தலைவர் வந்தால் எல்லா நாட்டின் அதிபர்களும் தலைவர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்க வேண்டும் என்னும் அளவுக்கு யாராக இருந்தாலும் தங்களுடைய நெறிமுறைகளை விட்டுக் கொடுக்காமல் கடைபிடிக்கும் என்றால் தான் வழங்கும் ஒரு விருது/பட்டம்/சான்று ஆகியவற்றை எப்படி அரசு அதுவும் ஒரு மாநில அரசின் தலைவர்களிடம் கொடுத்து கொடுக்க சொல்லும். ஏன் தன்னுடைய அமைப்பின் தலைவர்கள் மூலம் கொடுக்காமல் மாநில அரசின் தலைவர்கள் மூலம் கொடுக்க அனுமதித்தது?

அவர்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியில் ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் யார்? எந்த அமைப்பு விருது கொடுத்தாலும் அதில் அந்த அமைப்பின் தலைவர் கையெழுத்து இட்டால் தானே செல்லுபடியாகும். அப்படியே அவர்கள் சொல்லும் அந்த பட்டயத்தில் இருக்கும் யுனெஸ்கோ தலைவரின் பெயர் என்னவென்று சொல்லமுடியுமா? ஒன்று யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் கையெழுத்து போட வேண்டும். அல்லது அந்தந்த நாட்டின் யுனெஸ்கோ தலைவர் கையெழுத்துப் போட வேண்டும். அதனால் அந்த பெயரை சொன்னால் அடுத்து விவாதிக்க வசதியாக இருக்கும்.

‘ஏன் ஸார் இவ்வளவு கேள்விகளை கேட்கிறீர்கள். முடிந்தால் இல்லை என்று நீங்கள் நிரூபிக்கலாமே!!’ என்றால் அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே நிரூபிக்க. இப்போதும் சொல்கிறேன் நடக்காததை நடந்தது என்று வாதாடுபவர்கள் தான் நடந்ததற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். இல்லாத ஒன்றுக்கு ஆதாரம் கொடு என்றால் ஆதாரம் இல்லாததே ஆதாரம் தாண்டா கூமுட்டை! உங்களுக்கு பகுத்தறிவு ஒரு கேடு? ச்சை.. அவர்கள் ஒருவேளை அந்த பட்டயத்தில் இன்னாரின் கையொப்பம் இருக்கிறது எந்த யுனெஸ்கோ தலைவரின் பெயரை சொல்கிறாரோ அவர் பற்றிய முழுவிவரங்களை எடுத்து அப்படியொரு பரிசளிப்பில் அவர் கையெழுத்து இடவில்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார். ஆனால் அதற்கு அவர்கள் பெயரை கொடுக்க வேண்டுமல்லவா. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு பாரிஸில் இருக்கும் யுனெஸ்கோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி மொத்த விவரங்களை சேகரிக்க நாம் தயார். சவாலுக்கு தீச்சட்டிகள் தயாரா என்று சொல்லவும்.

இதன் பின்பு இருக்கும் அரசியல் என்ன என்பதை விளக்குகிறேன்…

ஐ.நா.வின் கிளைகளான யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் வருடந்தோறும் எத்தனையோ தலைப்புகளில் பல ஊர்களில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அந்தக் கருத்தரங்கில் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் என்று ஏதாவது உள்ளூர்காரர் நடத்துவதும் வழக்கம். அப்படி ஏதாவது ஓரமாக நிகழ்ச்சி நடத்தினால் அதற்கும் ஐ.நா.சபைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்படி தான் அந்த திருமுருகன் காந்தியும் ஊரை ஏமாதிட்டு திரியுறான். அவன் ஒன்றும் அங்கீகரிக்கப்பட்ட ஐ.நா.வின் கூட்டத்தில் பேசுவதில்லை. மாறாக ஐ.நா. சபையில் நிறைய தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அவ்வப்போது கூடி உலகம் முழுவதிலும் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும். அதில் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டு யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதை ஏதோ தான் ஐ.நா.வில் பேசிவிட்டதாக புளுகுகிறான் திருமுருகன் காந்தி. நிற்க. அந்த மாதிரி தான் இதுவும்.

1970ஆம் ஆண்டை யுனெஸ்கோ நிறுவனம் உலக கல்வி ஆண்டாக அறிவித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அப்படி பல ஊர்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் போல சென்னையிலும் நடைபெற்றிருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவில் அன்றைய முதலமைச்சர் சார்பில் ஒரு கேடயம் வழங்கப்பட்டு அதை அப்படியே யுனெஸ்கோ கொடுத்தாக பீலாவிட்டிருக்கிறார்கள் நமது திருட்டு திராவிட கிறுக்கர்கள். அதில் தான் அன்றைய மத்திய அமைச்சர் திரிகுணா சென் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். நம்ம தமிழ்நாடு தான் பகுத்தறிவு வழிந்தோடும் மாநிலமாச்சே… பெரியாரைப் பத்தி ஏதாவது கேள்வி கேட்டால் அவனை அப்படியே எல்லாரும் மொத்தமாக சேர்ந்து சேற்றை வாரியிறைத்து ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிடும் ஜனநாயகவாதிகள் என்பதால் யாரும் எதிர்த்து கேள்வி கேட்காமல் இத்தனை நாட்களாக ஆமாஞ்சாமி என்று தலையாட்டி தங்கள் சுயமரியாதையை நிலைநாட்டியிருக்கிறார்கள். திடீரென்று ஆரிய வந்தேறி பார்ப்பனர்கள் செய்த சதியின் காரணமாக இப்படி ஒரு அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது. நமது இனத்தைப் பிரிக்கும் பார்ப்பன சதியை முறியடிக்க வேண்டும் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நான் இப்போவும் ஒங்க தலைவருக்கு ஓபன் சேலஞ் விடுறேன். முடிஞ்சா விக்கிப்பீடியாவில் யுனெஸ்கோ கொடுத்த சாக்ரடீஸ் விருதை அப்டேட் செய்து பாருங்க. காறிதுப்பிடுவான். நான் வார்த்தைக்கு வார்த்தை திருட்டு திராவிட கும்பல் என்று திட்டும் போது அதை புரிந்துகொள்ளாத நண்பர்களுக்கு இப்போதாவது புரியும் என்று நினைக்கிறேன். இந்த கும்பல் இப்படி தான் காலங்காலமா ஊரை ஏமாத்திட்டு வயித்தை கழுவிட்டு இருக்குன்னு. இப்பவும் புரிஞ்சுக்கலைன்னா அந்த ஆண்டவனாலும் உங்களைக் காப்பாத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe