
சாம்சங் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்படும்.
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இல்லை.
மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.
கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 196 கிராம்.