ஜில்லுனு சூடேற்றும் இந்துஜா! ஜில் ஜில் ராணி பாடல்!

சினி நியூஸ் சினிமா
induja - 2026

தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் அழகான குடும்ப பெண்ணாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர்.

அதனை தொடர்ந்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆர்யா படமான மகாமுனி படத்திலும் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நடிகை இந்துஜா சூப்பர் டூப்பர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படித்த தைரியமான நகர்ப்புறத்தில் இருக்கும் நவீன பெண்ணாக இந்துஜா வருகிறார்.

கதாநாயகன் துருவா, தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா நல்லதொரு வில்லனாக வருகிறார். மேலும் இன்னொரு முக்கிய வில்லன்னாக புதுமுக நடிகர் ஸ்ரீனி நடித்துள்ளார். . இயக்குநர் ஏகே, , நடிகர் ஷாரா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன்.

ஜில் ஜில் ராணி என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.