‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப்பு ரெடி! இயக்குனர் சிவா!

சினி நியூஸ் சினிமா
ajith - 2026

நடிகர் அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

அஜித்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரசிகப் பெருமக்கள் உள்ளனர். அஜித் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவரது ரசிகர்கள் அதனை வேத மந்திரமாக ஏற்று பின்பற்றுவார்கள்.

ajith 1 1 - 2026

சினிமாத்துறையிலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் குறிப்பறிந்து செயல்படுவார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அஜித். அஜித்துடன் பணிபுரியும் கடைக்கோடி டெக்னிஷியன்கள் கூட அஜித்தை மனித நேயம் மிக்க மனிதர் என்றே புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கிய இயக்குநர் சிவா பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார். அஜித்தின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு தன்னம்பிக்கை என்று பெயர் வைப்பேன் என தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.