‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன்! அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா?!

Published:

pon radhakrishnan - 2026

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, மிசா காலத்தில் கைதானார் என்று ஒரு டிவி., பேட்டியில் பொன்முடி முன்னர் வைக்கப் பட்ட வாதம், இப்போது பலரை மிசாவுக்குள் இழுத்திருக்கிறது.

1975ம் ஆண்டும் தொடர்ந்து, மறு வருடமும் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, பலர் சிறை சென்றனர். அப்படி திமுக., தலைவராகவும் முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால் அவர் மிசா.,வின் கீழ் அடைக்கப் படவில்லை, கசமுசா செய்ததால் கைதாகி அடைக்கப் பட்டார் என்று சமூகத் தளங்களில் பல்வேறு அனுமானங்கள் உலா வருகின்றன.

குறிப்பாக, ஷா கமிஷன் அறிக்கையின் படி மிசா கைதிகளின் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவர் மிசா காலத்தில் அடைக்கப் பட்டார், ஆனால் மிசாவின் கீழ் அடைக்கப் படவில்லை என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இப்போது மிசாவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது உண்மை என்று பொன்ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது! இது பாஜக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

குறிப்பாக, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது தாக்கப்பட்டது உண்மை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக வெளியான செய்தி தவறானது என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.

அக்.18 வெள்ளிக்கிழமை அன்று, திருவரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே காந்தி ஜெயந்தி 150-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்!
இந்த யாத்திரை ஸ்ரீரங்கம் வழியாக திருவானைக்காவல் நாலுகால் மண்டபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜீவ் கொலை குறித்த சீமான் பேச்சு ஏற்கமுடியாதது; என் மண்ணில் இந்த நாட்டின் தலைவராக இருந்த ஒருவரை படுகொலை செய்ததை ஒருகாலும் ஏற்க முடியாது; இதை வைத்து பெருமைப்பட சிலர் இருப்பது கண்டிக்கத்தக்கது…

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் அவரை தாக்க முயன்ற போது நான் குறுக்கே பாய்ந்து தடுத்ததால் என் காது கேட்கும் திறனை இழந்தேன் என்று ஆற்காடு வீராசாமி பேசக் கேட்டிருக்கிறேன்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஸ்டாலின் சிறை சென்றது உண்மை தாக்கப்பட்டது உண்மை! ஆனால் சிட்டிபாபு கொலைக்கு காரணமானவர்களை தூக்கிக் கொண்டு திரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது! .. என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள வீடியோ பதிவினை பகிர்வு செய்து, பாஜக.,வினர் இப்போது செய்திப் பிழை குறித்து விமர்சிக்கின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img