4வது முறையாக கைது செய்யப்பட்ட கருகலைப்பு போலி மருத்துவா்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி
ANATHI KARU - 2026

திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச் சேர்ந்தவர் ஆனந்தி.

இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
ஆனந்தி சில மருத்துவமனைகளில் செவிலியராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிலரிடம் உதவியாளராக இருந்தபோது, பேன்சி ஸ்டோர் ஒன்றை துவக்கியிருந்தார்.

அந்த பேன்சி ஸ்டோரில் ரகசியமாக ஒரு அறை அமைத்து, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தார்.

கடந்த ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்ட ஆய்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக ஆனந்தி கைது செய்யப்பட்டதோடு, அவரது பேன்சி ஸ்டோருக்கு சீலும் வைக்கப்பட்டது.

மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு செய்ய அவர் வந்துள்ளதாக காவலர்களுக்கு தகவல் கிடைக்க, அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் வரும் தகவல் கிடைத்ததால் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு தப்பிச் சென்ற ஆனந்தி, அங்கே பதுங்கி இருந்திருக்கிறார்.

இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.