அர்ஜூன் கபூருடன் விரைவில் திருமணம்: மலைகா அரோரா!

Published:

malaika 1 - 2026

தனது இரண்டாவது திருமணம் பற்றிய திட்டங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் நடிகை மலைகா அரோரா.

போனி கபூரின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உயிரே படத்தில் ஷாருக்கானுடன் ‘தைய தைய தக தையா’ என ஆட்டம் ஆடி நமக்கு அறிமுகமானவர் தான் இந்த மலைகா.

உயிரே படம் வெளிவந்த ஆண்டு 1998. அப்போதே மலைகா திருமணம் ஆனவர். இந்தி நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

malika arora 1 - 2026

ஆனால் அந்த திருமண வாழ்க்கை அவருக்கு தோல்வியில் முடிந்தது. கடந்த 2017ம் ஆண்டு கணவர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டார். 16 வயதாகும் மகன், மலைகாவுடன் தான் வசித்து வருகிறார்.

மலைகாவும் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபுரும் காதலிக்கிறார்கள். அர்ஜுனுக்கு தற்போது 35 வயதாகிறது. மலைகாவுக்கு 46 வயதாகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அர்ஜுனும் தானும் காதலிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளிப்படையாக அறிவித்தார் மலைகா. சமீபத்தில் மலைகா அரோராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அர்ஜுன் செம ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த மலைகா அரோரா தனது திருமண திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அதில், தனது திருமணம் கடற்கரை மணல் பரப்பில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் தான் நடைபெறும் என மலைகா தெரிவித்துள்ளார்.

malika arora - 2026

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் எல்லி சாப் உருவாக்கும் வெள்ளை நிற திருமண கவுனை அப்போது தான் அணிந்து கொள்வேன் எனவும் மலைகா கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு குறித்து மலைகா நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் மகன் இருக்கும் போது, தன்னைவிட 10 வயது இளையவரை காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மலைகா கூறியிருப்பதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img