கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய தோழி! பழி தீர்த்த கணவர்! சாட்சி சொன்ன பிரபல நடிகை!

Published:

mantchu 1 - 2026

பிரபல மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார், திலீப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மஞ்சுவாரியர் கொச்சி கோர்ட்டில் 11 வது சாட்சியாக நடிகர் திலீப்புக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் சாட்சி சொல்ல வந்தார். அப்போது அவர், திலீப்பால் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது தோழி என்று தெரிவித்தார். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கு இருக்கும் கள்ள தொடர்பை தனக்கு தெரிவித்ததால் அவர் இப்படி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறினார். இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

dhilip kavya - 2026

நான் 2015ஆம் ஆண்டு திலீப்பை விவாகரத்து செய்தேன், அவருக்கும் காவ்யாவுக்கும் இடையிலான திருமணத்தை மீறிய உறவே இதற்கு காரணம். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே,காவ்யாவுடனான அவரது உறவு தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாக கூறினார்.

“திலீப்புடனான எனது திருமணத்திற்குப் பிறகு, நான் என்னை சினிமாவிலிருந்து முற்றிலுமாக துண்டித்துவிட்டேன். நான் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு நாள், அவர்களின் கள்ளக்காதல் விஷயத்தை திலீப்பின் போனில் காண நேர்ந்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

நான் இதை எனது நண்பர்களான கீது, சம்யுக்தா மற்றும் தாக்கப்பட்ட நடிகையுடன் பகிர்ந்து கொண்டேன். காவ்யாவுடனான உறவு பற்றி தாக்கப்பட்ட நடிகை என்னிடம் சொன்னதைப் பற்றி நான் திலீப்பிடம் கேட்ட போது, ​அவர் என்னிடம் இல்லை என்று மறுத்தார் ” என்றும் மஞ்சு வாரியர் கூறினார். நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2ஆவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img