கொரோனா விழிப்புணர்வு: வீடியோ வெளியிட்ட விவேக்!

Published:

vivek - 2026

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வது குறித்து நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கி உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மொத்தம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோரை உயிரை பறித்துள்ளது கொரோனா வைரஸ்.

இந்தியால் தற்போது வரை 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம்.

வெளி நாட்டில் இருந்து திரும்பியவரின் மூலம் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நுழைந்திருப்பது மக்களிடையே பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிப்பது குறித்தும் அதனை பரவாமல் தடுப்பது குறித்தும் நடிகர் விவேக் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அனுப்பியுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு வைரஸ். அதிலும் தமிழகம் போன்ற ஒரு இடத்தில் இப்படி வெயில் அடிக்கும் போது நிச்சயம் கொரோனா வைரஸ் அழிந்து விடும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இருந்தாலும் பாதுகாப்புக்காக அடிக்கடி சோப்பு போட்டோ சுத்திகரிப்பான்களாலோ மக்கள் கையை அடிக்கடி கழுவ வேண்டும். இரும்மும் போதோ தும்மும் போதோ வாயையும் மூக்கையும் மூடனும். இருமல் தும்மல் இருப்பவர்களிடம் நெருங்கி பழக கூடாது.

எல்லாத்துக்கும் மேல தமிழக கலாச்சாரமான கை குலுக்காமல், கை குவித்து வணக்கம் சொல்ல வேண்டும் என்றும் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். அவருடைய நகைச்சுவைகள் எப்போதும் சமூகம் சார்ந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். இதனாலேயே அவரை ரசிகர்கள் சின்னக் கலைவாணர் என்று அழைத்து வருகின்றனர்.

பலமுறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக். அதோடு திரைத்துறையில் அவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகரான நடிகர் விவேக், தொடந்து மரங்களை நட்டு வருகிறார். என்ன விழா மற்றும் நிகழ்ச்சியாக இருந்தாலும் மரம் நடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img