மேக்னாவும் அவருடன் 10 வருடங்களாகக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவருக்கு, கடந்த சனிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. ரசிகர்களையும் திரையுலகினரையும் இந்த மரணம் அதிர வைத்தது. லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் செல்ல அவர் தயாராகி வந்த நிலையில் இப்படி நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர் தொடர்ந்து உடைந்து நொறுங்குவதாகச் சொல்கிறார்கள். மேக்னாவும் அவருடன் 10 வருடங்களாகக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தபோது, மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியானது. தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தாரா, சுமலதா உள்ளிட்ட மூத்த நடிகைகளிடம் தெரிவித்து ஆசி பெற்றிருக்கிறார், மேக்னா. இன்னும் சில மாதங்கள் கழித்து இந்த இனிப்பான செய்தியை வெளியே அறிவிக்க இருந்தனர்.
ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. குழந்தையை எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருப்பது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்னும் அவரது குடும்பம் இந்த சோகத்தில் இருந்து மீளவில்லை. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மறைந்து இத்தனை நாட்கள் ஆகியும் அவரைப் பற்றி தினமும் ஏதாவது தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும், மகிழ்ச்சி அடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உடனடியாக அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க நினைத்தார். பின்னர் பெண்குழந்தை பிறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அழகான குழந்தை பொம்மை ஒன்றை மேக்னாவுக்கு அவர் பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த தகவல் இப்போது வெளியாகி ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தனது அத்தை மகனான சிரஞ்சீவியுடன் சிறுவயதில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.