பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

Published:

ramgobal varma

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்,

இருவரும் வேறுவேறு சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்ருதாவின் தந்தை இவர்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

amrutha

இதையடுத்து அம்ருதா கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து மாருதிராவ் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் அம்ருதா தன் கணவருடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று வெளியே வந்த போது, பிரணய் குமாரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது.

amrutha

இதில் சம்பவ இடத்திலேயே பிரனய் குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆணவ கொலை செய்யப்பட்ட பிரணாயின் கதையை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை எடுக்க உள்ளதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

மேலும், பிரணாயின் மனைவி அம்ருதா மற்றும் ஆணவ கொலைக்கு காரணமாக கருதப்படும் அவரது தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்.

amrutha

இந்த சூழலில், பிரணய் மற்றும் அம்ருதா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பாக தங்களிடம் அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படத்திற்கு தடைக்கோரி பிரணயின் தந்தை பாலசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராம்கோபால் வர்மா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img