எப்டி தல இப்படி நிக்குறீங்க? – சிம்பு வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

சினி நியூஸ் சினிமா
79355fd7d3b6275a5c1f5dcb6ad742fa - 2026

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 

இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக மாநாடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் சிம்பு. இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏறக்குறைய ஒரு வருட காலமாக சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகியிருந்த சிம்பு தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிரம், உடனடி அப்டேட் என அசத்தலான அப்டேட்டுகளை கொடுத்து அவரின் ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.