சூரரைப்போற்று நாளை ரிலீஸ்.. சூர்யா வெளியிட்ட மாஸ் வீடியோ….

Published:

1c4be018e7a0f7b6c9191057acec5ef3 - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் வருகிற 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களின் கையெழுத்தை வானில் பறக்கும் ராட்சச பலூனில் பதிவிட்டு அந்த பலூனை பறக்கவிடும் வீடியோவை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இது முதல் முறை என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

 
Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img