அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்… நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம்~ வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!!
இப்படி ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பூ !
அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ. இவர் நேற்று பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நிரந்தரமாக கையை கழுவுங்கள்’ என காங்கிரசை மறைமுகமாக விமர்சித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார்
நடிகை குஷ்பூ 90களில் பிரபலமான நடித்து பெயர் வாங்கி இருந்தார் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த குஷ்பூ பின்னாளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊடகத்துறையின் வெளிச்சத்திலேயே தன்னை வைத்திருந்தார் இந்த நிலையில் கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைதார் நடிகை குஷ்பு!
திடீரென அவருக்கு திமுக.,வில் உள்ளேயே புகைச்சல் தொடங்கியதால், கட்சியை விட்டு வெளியேறக் கூடிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு தாவுவது போல காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியையும் பெற்றார் நடிகை குஷ்பூ. தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்காக பிரச்சாரமும் செய்து வந்தார்
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விலகுவதற்கு முடிவு செய்தார். அதே நேரத்தில், தன்னை அதுவரை கடுமையாக தாம் விமர்சித்து வந்த பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குஷ்பூ பாஜகவில் இணைந்ததற்காக பலர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்
காங்கிரஸ் கட்சியில் இருந்த வரைக்கும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவுகளை மேற்கொண்டு வந்த குஷ்பு மோடிக்கு எதிராகவும் பாஜகவை விமர்சித்தும் கடுமையான டிவிட்டர் பிரசாரங்களை முன்வைத்தார். இந்த நிலையில் அவர் பாரதிய ஜனதாவில் இணைந்த பின்னர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார்
நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்த போது காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மிக கடுமையான விமர்சனத்தை குஷ்பு மீது முன்வைத்தார் குஷ்புவை தாங்கள் நடிகையாகவே பார்ப்பதாகவும் அவர் அரசியல் தலைவராக பார்க்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார் குஷ்புவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாகக் கருதி அது தனித்து விடப்படும்,’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
அதற்கு ஏற்றார்போல் பீஹாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைக் குறிப்பிட்டு விமர்சிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் …: அடிக்கடி கை கழுவுங்கள் இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடிஜி பீஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்… என்று பதிவிட்டிருந்தார்
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் அக்கட்சியில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் குஷ்புவின் இந்தக் கருத்து, திமுக., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.