நயன்தாராவுக்கு வாழ்த்து – விக்னேஷ் சிவனுக்கே டஃப் கொடுத்த நெட்பிளிக்ஸ்…

Published:

34eeb51f34cae3ebcf9399c94c51a83a - 2026

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. பல வருடங்களாக தனது மார்கெட்டை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

எனவே, இயக்குனரும், அவரின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே’ என உருகியுள்ளார்.

இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ உங்கள் பெயர் நயனாக இருக்கலாம். ஆனால் எப்போது நீங்கள் 10/10’ எனக்கூறி வாழ்த்து தெரிவித்திருந்தது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘யாருடா இவங்க நமக்கே  டஃப் கொடுப்பான் போல’ என ஐ பட மீம்ஸ் படத்தை விக்னேஷ் சொல்வது போல் போட்டு கிண்டலடித்திருந்தனர்.

இந்த மீம்ஸை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img