நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல… புரட்சியின் மைதானம்.: பாரதிராஜா

bharathirajaa - 2026காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராடி வரும் பல்வேறு கட்சியினர்களின் போராட்டங்கள் நேற்று முதல் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்தியே தீருவது என அரசியல் கட்சியினர் கொதிப்புடன் கிளம்பியுள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கூறியுள்ளதாவது

“என் இனிய தமிழ் மக்களே…
நம் இனத்தை அழித்தார்கள்;
நாம் எதுவும் பேசவில்லை.
நம் மொழியைச் சிதைக்கிறார்கள்;
நாம் மவுனமாக இருக்கிறோம்.
நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும்
போராடாமலே இருக்கிறோம்.

உறைந்து போய்க்கிடக்கும்
நம் உணர்வுகளை
உசுப்பிவிட்டு,
நம்மைப் புரட்சியாளர்களாய்
மாற்ற எத்தனையோ
அமைப்புகள் போராடிக்
கொண்டிருக்கும்போது,
‘ஐபிஎல்’ என்னும் மாய உலகத்திற்கு
நம்மை அடிமைப்படுத்தி,
நம்முடைய தேசியப் புரட்சிக்குத்
தீவைக்கும் முட்டாள்தனமான
விளையாட்டை நிராகரிப்போம்!

தமிழ் மக்களின் ஒற்றுமை
கைகூடி வரும்போது,
கருக்கலைப்பு செய்யவரும்
எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்!
தமிழா,
ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை
நிராகரி.
நிறைய வேண்டியது
விளையாட்டு மைதானத்தின்
இருக்கைகள் அல்ல…
புரட்சியின் மைதானம்.

தமிழனை விளையாட்டாக
நினைத்து, கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே… எங்கள் தமிழர்களுக்கு
வீரவிளையாட்டும் தெரியும்
என்பதை நினைவில் வையுங்கள்.
இது எச்சரிக்கை அல்ல…
அன்புச் சுற்றறிக்கை.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை.
கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.
மீறி நடந்தால்,
அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.
மாறாக,
எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள்
என்பதைத் தமிழ் இன உணர்வோடு
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories