நடிகை சதா தயாரிக்கும் பெண்கள் விழிப்புணர்வு திரைப்படம்

சினி நியூஸ் சினிமா

நடிகைகள் தயாரிப்பாளராக மாறுவது அபூர்வமாக இருந்து வரும் நிலையில் ஷங்கரின் ‘அந்நியன்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த சதா தற்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

சதா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘டார்ச் லைட். இந்த படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் குறித்த கதையம்சம் கொண்டது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக சதா நடித்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் அப்துல் மஜீத், திறமையை பார்த்த சதா, அவருடைய அடுத்த படத்திலும் நடிப்பது மட்டுமின்றி அந்த படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்த படமும் சமூக அக்கறையுள்ள பெண்கள் குறித்த விழிப்புணர்ச்சி படம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.