‘மன்னன்’ பாணியில் படமாகும் சிவகார்த்திகேயன் படம்

Published:

sivakarthikeyan2 - 2026சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘சீமராஜா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இந்த வாரம் சென்னையில் நடந்தது.

ராஜேஷ் எம் இயக்கவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.

வேலைக்காரன் படத்தை அடுத்து இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தை போன்ற கதையம்சம் உள்ள படம் என்றும் இந்த படத்தில் உள்ள நயன்தாராவின் கேரக்டர் கிட்டத்தட்ட விஜயசாந்தி கேரக்டரை போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

நயன்தாராவை தவிர இந்த படத்தில் மேலும் ஒரு முன்னணி நாயகி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாவது ஞாயிறு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது

Related articles

Recent articles

spot_img