பெண்களை இழிவுபடுத்துவதுதான் அடல்ட் காமெடியா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்

Published:

Lakshmi Ramakrishnan - 2026கடந்த வெள்ளியன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்து கொண்டிருந்தாலும், அதே அளவுக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது ஏற்கனவே பாரதிராஜா உள்பட பலர் இந்த படத்திற்கு கண்டங்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவ்து:

இந்த சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்புணா்வு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது நல்ல விஷயமில்லை

ஏ படம், நகைச்சுவை படம் என அனைத்து பிரிவுகளிலும் படம் தயாரிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த படங்கள் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். பெண்களை அவமதிப்பதும், இழிவாக பேசுவதும் தான் அடல்ட் காமெடியா? சென்சார் போர்டு இதை எப்படி அனுமதித்தது?

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய படங்களிலும் அடல்ட் காமெடி காட்சிகள், வசனங்கள் இருந்தன. ஆனால் அவை ரசிக்கும் விதமாகவும், ஆபாசம் இல்லாமலும் இருந்தது. ஆனால் இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் வெறுக்கும் வகையில் அமைந்துள்ளது’

இவ்வாறு நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் கூறியுள்ளார்

Related articles

Recent articles

spot_img