ஜிவி பிரகாஷ் நடிக்கும் 15வது படத்தின் நாயகி அறிவிப்பு

சினி நியூஸ் சினிமா

amriyadastur - 2026இசையமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த ஜிவி பிரகாஷ், டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகரானார். இந்த படம் பெற்ற வெற்றியை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் தற்போது இணைந்துள்ளார். இந்த படம் ஜிவி பிரகாஷின் 15வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘அனேகன்’ மற்றும் ஜாக்கிசான் நடித்த குங்பூ யோகா போன்ற படங்களில் நடித்த அம்ரியா தஸ்தூர் தான் இந்த படத்தின் நாயகி. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஃபேண்டஸி மற்றும் ரொமான்ஸ் படமான இந்த படம் 3D டெக்னாலஜியில் உருவாகவுள்ளது. மேலும் அம்ரியா தவிர இன்னும் ஒரு நடிகை நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.