தொடர் தோல்வியிலும் துவளாத நிக்கி கல்ராணி

சினி நியூஸ் சினிமா

nikki galrani1 - 2026

ஜிவி பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி அதன் பின்னர் நடித்த நெருப்புடா, பக்கா, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. தொடர் தோல்வியிலும் துவளாமல் நடித்த நிக்கி கல்ராணிக்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கலகலப்பு 2 ஆகிய மூன்று வெற்றிப்படங்கள் கிடைத்தது. இதனால் மீண்டும் நடிகை நிக்கி கல்ராணி பிசியாகி உள்ளார்.

தனது திரைப்படங்களின் வெற்றி தோல்வி குறித்து நிக்கி கல்ராணி கூறியபோது, ‘’வெற்றி பெறும் என்று நம்பியே 100 சதவீத உழைப்பைக் கொடுக்கிறோம். அதற்கு சரியான பலன் இல்லாதபோது சோகமாகத்தான் இருக்கும். நாடு முழுக்க வருடத்துக்கு 500-க்கும் மேற்பட்ட படங்கள் வருகிறது. அதில் நமது படமும் ஒன்று. நல்ல இடத்தை பிடிக்கவேண்டும் என்றுதான் ஓடுகிறோம். சமயத்தில் அது தவறிவிடும்.

nikki galrani - 2026அதற்காக மனதை தளர விடுவதில்லை. அடுத்த படம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பணியைத் தொடங்கிடுவேன்’’ என்று கூறியுள்ளார்.

நிக்கி கல்ராணி தற்போது ‘கீ’, ‘சார்ளி சாப்ளின் மற்றும் ஒரு மலையாள படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்னணி நாயகன் நடிக்கும் படத்தில் நடிக்க நிக்கி கல்ராணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.