பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

typistgopu - 2026பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் காலமானார். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டைப்பிஸ்ட் கோபு.

பழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை நேற்று காலமானார்.  அவருக்கு வயது 85.

குணர்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற  டைப்பிஸ்ட் கோபு, எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல்,  விஜய் – அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரது திரைப்படங்களை இந்தத் தலைமுறை ரசிகர்கள் கூட ரசித்துப் பார்க்கின்றனர்.

நேற்று சென்னையில் காலமான டைப்பிஸ்ட் கோபுவுக்கு திரை உலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 11 மணி அளவில் அவரது இறுதி சடங்கு, சென்னை அயப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.