மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..! ஒளறல் ஸ்டாலின்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

mkstalin muslimleagemeeting - 2026

“மோடியை எதிர்ப்பதால் இந்து மதத்தை ஆதரிப்பதாகாது”  என்று மு.க. ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

எனக்குத்தான் புரியலையா? உங்களுக்காவது புரியுதா??. என்ற கேள்விக் கணையுடன் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெற்றது! மதுரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மு க ஸ்டாலின் வாய் குழறலில் என்னவெல்லாமோ பேசி, ஹிந்து, மோடி, ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் உளறிக் கொட்டினார்! இவ்வளவுக்கும் வழக்கம் போல் துண்டுச் சீட்டில் எழுதித்தானே வைத்திருந்தார் என்று கலாய்க்கிறார்கள் இணையத் தமிழர்கள்!

அவரது இந்தப் பேச்சு இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது! அந்த மாநாட்டில் அவர் பேசிய போது… “நாளைக்கு சிலர் சொல்வார்கள்… பார்த்தாயா முஸ்லிம் லீக் மாநாட்டில் மு க ஸ்டாலின் மோடியை தாக்குகிறார் என்று ஒரு குற்றத்தை கூட என் மீது சொல்லலாம்! ஏன் இந்து மதத்தினுடைய விரோதி என்று கூட என்னைப் பார்த்து சொல்லுவார்கள்!  பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு… இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு! இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது! என்று அவர் கூறியது தான் அந்த மேடையில் அமர்ந்திருந்த பலருக்குமே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

இவர் உண்மையில் தான் பேசுவதை நன்கு தெரிந்துதான் பேசுகிறாரா அல்லது எப்பொழுதும் போல் உளறிக் கொட்டுகிறாரா? எப்போதுதான் இவர் நிதானத்தில் இருப்பார் என்றெல்லாம் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

stalin tweet1 - 2026

இன்னும் சிலர் மழைக்குக்கூட பகுத்தறிவுப் பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்களுக்கு இந்தப் பேச்சுதான் வரும் என்றும் கூறுகிறார்கள்!

ஏற்கெனவே இஸ்லாமிய திருமணம் ஒன்றுக்குச் சென்றிருந்த மு க ஸ்டாலின் திருமண வரவேற்பில் பேசும்போது, ஹிந்து திருமண முறைகளை கேவலப்படுத்தியும் திருமண சடங்குகளை கொச்சைப்படுத்தியும் பேசினார். இஸ்லாமிய திருமண முறையை உயர்வாகவும் இந்து திருமண முறையை இழிவாகவும் பேசிய அவருக்கு அப்போதே பலர் கண்டனம் தெரிவித்தார்கள்.

இப்போது முஸ்லிம் லீக் மாநாட்டில் இந்து மதத்தையும் மோடியையும் வசைபாடும் ஸ்டாலின் எந்த தைரியத்தில் இந்துக்களிடம் ஓட்டு கேட்டு வருவார் என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்!

இந்து ஓட்டு வங்கி என்ற ஒன்று இப்போது சிறிது சிறிதாக உருவாகி வருவதால் ஒட்டுமொத்தமாக தன்னை இந்து மத விரோதி என்று பலர் முத்திரை குத்துகிறார்களே என்ற கவலையில் இப்போதுதான் அப்படி எல்லாம் இல்லை என்று மேடைக்கு மேடை வாய்திறந்து உளறிக்கொட்டி வருகிறார் மு க ஸ்டாலின்

stalin tweet2 - 2026

திருவரங்கம் சென்ற போது அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் நெற்றியில் சந்தனத்தையும் குங்குமத்தையும் வைத்தபோது உடனடியாக தன் கைகளால் நெற்றியை அழித்துவிட்டு கோயிலின் சடங்கை கேவலப்படுத்தி, இந்து மதத்தின் புனிதத்தை உதாசீனப்படுத்தினார் முக ஸ்டாலின்!

ஆனால் அதே நேரம் பசும்பொன் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு சென்றிருந்தபோது அங்கே அவர்கள் வைத்த நெற்றி திருநீறை சிறிது நேரம் அப்படியே தான் வைத்திருந்தார்! எனவே ஓட்டுக்காக… ஓட்டுப் பிச்சைக்காக ஸ்டாலின் எதை வேண்டுமானாலும் செய்வார் என்று கருத்து தெரிவிக்கும் சிலர், எனவே ஹிந்து ஆன்மீக வாதிகளின் ஓட்டு தனக்குத் தேவையில்லை என்றும் தேவர் சமுதாயத்தின் ஓட்டு பாதிக்கப் பட்டு விடக் கூடாது என்பதுமே தன் குறிக்கோள் என்றும் நெற்றி குங்குமத்தை அழித்ததிலிருந்தும் வைத்ததிலிருந்தும் காட்டியிருக்கிறார் மு க ஸ்டாலின் என்கிறார்கள்..!

stalin tweet3 - 2026

இதுதான் சரியான பகுத்தறிவு. எந்த இடத்துல இருக்கோம்னு உணர்ந்து சரியாக செயல்படும் அறிவு…. சிலருக்கு கொள்கை நாளுக்கு நாள் வேறுபடும். நம்ம தலைவருக்கு நொடிக்கு நொடி மாறும். ஆக இதை போன்ற பல கொடுரமான, கேவலமான கலாய்ப்புகளை சந்தித்த இவருக்கு இது ஒரு பொருட்டே இல்லை…. என்பதுதான் அதில் ஹைலைட்!

ஸ்டாலின் பேசிய வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.