யாரு பேர போடுறது?! செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!

Published:

upmpmla - 2026

உத்தர பிரதேசத்தில் பாஜக MP, MLA இடையே மோதல்- செருப்பால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும்  ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர்.

அந்த மாநிலத்தின் சாந்த்கபீர் நகர் தொகுதி எம்.பி.யான சரத் திரிபாதியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ராகேஷ் சிங் பாகலும், ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.

உத்தரப்பிரதேச அமைச்சர் அசுதோஷ் டாண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, திட்டம் ஒன்றின் அடிக்கல்லில் யார் பெயரைப் பொறிப்பது என்பதில் எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சரத் திரிபாரி தனது காலணியைக் கழற்றி, ராகேஷ் சிங்கை அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ராகேஷ் சிங்கும் பதிலுக்கு தாக்க பரபரப்பு அதிகரித்தது. போலீசார் தலையிட்டு மோதலைத் தடுத்தனர். மோதல் காரணமாக ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Related articles

Recent articles

spot_img