கர்ஜனையில் த்ரிஷா

சினி நியூஸ் சினிமா

thirsha 1 - 2026த்ரிஷாவின் அடுத்த படம் “கர்ஜனை’. சுந்தர் பாலு எழுதி இயக்கும் இப்படத்தில் அமித் பார்கவ், வம்சி கிருஷ்ணா, வடிவக்கரசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

“”ஒரு குற்றம், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்கள்  இக்கதையின் ஆதாரம். இங்கே குற்றம் ஒரு நம்பிக்கை துரோகத்தால் விளைகிறது. அந்தத் துரோகத்தின் ஆணிவேர் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதனுள்ளே பேசுப்படும் பொருள்.karjanai - 2026மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். ஆக்க்ஷன், த்ரில்லர் என இந்தக் கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டி சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. இந்தப் படம் பெரும் விவாத பொருளை உண்டாக்கும் என்பதில் எந்தவித மாறுபாடும் இல்லை” என்றார் இயக்குநர். கொடைக்கானல் வனப்பகுதியில் அதிகமான படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.