ரொமான்டிக்காக இருக்கும் கணவர் வேண்டும் ! ரஷ்மிகா மந்தனா !

சினி நியூஸ் சினிமா

rashmika 1 - 2026கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ள ரஷ்மிகா தளபதி 64 படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.vijay reshmiga - 2026டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது.விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் மற்றும் ரஷ்மிகா கலந்து கொண்டு வருகின்றனர்.

டியர் காம்ரேட் விளம்பர நிகழ்ச்சிகளில் ரஷ்மிகா சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் உண்மையானவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும். அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும், நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.karthi reshmika - 2026என் வருங்கால கணவரின் வயது முக்கியம் இல்லை. அவர் ரொமான்டிக்காக இருந்தால் வயது வித்தியாசம் பெரிய விஷயம் இல்லை. இது தான் நான் என் வருங்கால கணவரிடம் எதிர்பார்ப்பது என்று ரஷ்மிகா தெரிவித்துள்ளார். ரஷ்மிகாவின் பேட்டியை பார்த்த கன்னட ரசிகர்களோ திருமணத்தை நிறுத்திவிட்டு வருங்கால கணவர் பற்றி பேசுகிறீர்களா,  என்று கூறி அவரை விளாசியுள்ளனர்.rashmika e1563858881563 - 2026ரஷ்மிகா மந்தனாவுக்கும், அவர் நடித்த கிரிக் பார்ட்டி பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பிறகு 2018ம் தேதி செப்டம்பர் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். ரஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் அவர் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்ததாக பேச்சு கிளம்பியது. அதில் இருந்து கன்னட ரசிகர்கள் ரஷ்மிகாவை அடிக்கடி திட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.