அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அட்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் கடல் போல் திரண்டுவருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீயர், கடந்த காலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு பயந்து உற்சவரான அத்திவரதர் பூமிக்கடியில் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பூமிக்கு அடியில் இருந்து அத்திவரதர் தற்போது மேலே வந்ததால்தான் தற்போது மழை பெய்வதாகக் குறிப்பிட்ட சடகோப ராமானுஜ ஜீயர், அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் புதைப்பது நல்லதல்ல என்றார். இது தொடர்பாக அனைத்து மடாதிபதிகளும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கப் போவதாகவும் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

