ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் ! ஜோதிகா பெருமூச்சு !

சினி நியூஸ் சினிமா

jo 1 - 2026ஜோதிகா – ரேவதி இணைந்து நடிக்கும் ஜாக்பாட் படம் நாளை (ஆக.,2) ரிலீசாகிறது. இது சமயம் ஜோதிகா அளித்துள்ள பேட்டி : ஜாக்பாட் படத்தில் இயக்குனர் கல்யாண், அக்க்ஷயா என்ற அழகான கதாபாத்திரத்தை உருவாக்கி என்னை நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் நகைச்சுவை, ஆக்க்ஷன் இதோடு ஒரு செய்தியும் சொல்லியிருக்கிறோம். jo family - 2026இப்படத்திற்காக 6 மாதம் சிலம்பம் கற்றேன். பிறகு வீட்டில் நான், கார்த்தி மனைவி, குழந்தைகள் என எல்லோரும் கற்றோம். சமூக படங்களில் அதிகம் நடிப்பதால் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. ராட்சசி படம் ஒரு உண்மை கதை. இந்த மாதிரி கதையை பண்ணும்போது எனக்கு பயமில்லை. a.r.rahuman 1 - 2026என் பலம் சூர்யா தான். படப்பிடிப்பிற்காக நான் சென்றுவிட்டால் குழந்தைகளை அவர் தான் பார்த்துக் கொள்வார். புதிய இயக்குநர்களோ, ஏற்கனவே உள்ள இயக்குநர்களோ யாராக இருந்தாலும் எனக்கு ஏற்ற மாதிரி கதை கொண்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது.jo cimran - 20262டி தயாரிப்பு எங்களது சொந்த நிறுவனம் என்பதால் அதற்கு ஏற்றபடி வேலை செய்வதால் படப்பிடிப்பு, குழந்தை என இரண்டையும் கவனிக்க முடிகிறது. கதாநாயகி சார்ந்த சின்ன பட்ஜெட் படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் மாதிரியான பிரபலங்கள் இசையமைத்தால் உதவியாக இருக்கும். சிம்ரன் கூட நடிக்க ஆசை, நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம் என்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.