அஜித்தின் என்னை அறிந்தால் முதல் நாள் வசூல் சாதனை

சினி நியூஸ்

இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலாக அஜித்தின் ”என்னை அறிந்தால்” படம் ரூ14.05 கோடி வசூல் ஈட்டியுள்ளது. கடந்த 5ம் தேதி அஜீத் நடிப்பில் வெளியான ”என்னை அறிந்தால்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ.10.80 கோடி வசூல் ஆகி சாதனை படைத்துள்ளது. கேரளாவில் 107 திரையரங்குகளில் வெளியாகி, ரூ.1.65 கோடி வசூலாகியுள்ளது. பெங்களூருவில் 39 திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் ரூ. 1.71 கோடி வசூலானது. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் ரூ. 2 கோடி வசூலாகியுள்ளது. ஆந்திராவில் அடுத்த வாரம் படம் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வசூல் வேட்டைதானாம். இருப்பினும் அண்மையில் வெளியான படங்களின் வசூல் சாதனையை என்னை அறிந்தால் படம் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ennai-arinthalரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.37 கோடி, இதற்கு அடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ ரூ.27 கோடி வசூல், அடுத்ததாக விஜய்யின் ‘கத்தி’ ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.