கோவை, மதுரை ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா!

தனது இசை வளத்தால் உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களை கட்டி போட்ட யுவன் ஷங்கர் ராஜா, தற்போது பல்வேறு பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள் என்று ஒரு பெரிய இசைக் குழுவுடன் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

துபாய், கோலாலம்பூர், சென்னை, மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இதற்க்கு முன்னர் நடந்த நிகழ்சிகள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான கோவையிலும், மதுரையிலும் நடக்க உள்ளது.

கோவையில் வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்திலும், ஜனவரி 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்திலும் நடக்க உள்ளது. யுவனுடன் இது வரை பணியாற்றிய இயக்குனர்களுடன், இசைஞானி இளையராஜாவும் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.