20 தமிழர்கள் சுட்டுகொலை: புலி படக்குழு அதிர்ச்சி!

vijay127விஜய்யின் புலி படம் தற்போது தலைக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படம் ஆரம்பத்தில் சென்னையில் நடைபெற்றது.

தொடர்ந்து கேரளா, திருப்பதி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சிம்பு தேவன். இந்நிலையில் விஜய், ஸ்ருதி ஹாசன் பங்குபெறும் காட்சிகள் கடந்த செவ்வாய் கிழமை திருப்ப சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெற்றது.

அதே நாளில்தான் அந்த இடத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் 20 தமிழர்கள் என்கவுன்ட்டர் நடந்தது என்று கூறப்படுகிறது. இதையறிந்த படக்குழு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.