த்ரிஷா கல்யாணம் நின்று விட்டதா? பரபரப்பு தகவல்

Published:

trisha varunmanian2த்ரிஷாவிற்கும், தயாரிப்பாளர் வருண் மணியன் இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி, இருவருக்கும் இடையில் பல்வேறு விஷயங்கள் ஒத்து போகவில்லை என்றும் இவர்கள் உறவில் முன்பு போல் சுமுகமாக இல்லாமல் விரிசல் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு தற்போது பல படங்கள் த்ரிஷாவை தேடி வருவதால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம் த்ரிஷா. இது வருண் மணியனுக்கு பிடிக்கவில்லையாம். இதனிடையே சமீபத்தில் வருண் மணியன் வீட்டில் நடந்த விழாவிலும் த்ரிஷா கலந்து கொள்ளவில்லையாம். வருண் மணியன் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை கூட த்ரிஷா அணியாமலே இருக்கிறார் என்று தெலுங்கு மீடியா செய்திகளை வெளியீட்டு வருகிறது.  

Related articles

Recent articles

spot_img