சாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா

Published:

savarkar vd 1 - 2026

1883 இல் பிறந்த சாவர்க்கர் 1857 இல் எப்படி இடம் பெற்றிருக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தமாக கேள்வி எழுப்புவார்கள்… முதிர்ச்சியடைய வேண்டும் .

அமித் ஷாவின் கூற்று சரியே , 1883 இல் பிறந்த சாவர்க்கர் தான் முதன் முதலில் மிகத்தெளிவாக முதல் சுதந்திர போராட்டம் குறித்து எழுதிய இந்தியர் , அந்தப் புத்தகம் தான் எல்லோருக்குமான ரெபெரென்ஸ் , அந்த வகையில் அவர் தான் சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்டு வந்த முதல் சுதந்திர போராட்டத்தை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் . அந்தப் புத்தகம் 1909 ம் ஆண்டு வெளி வருவதற்கு முன்னரே ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது , ( அதை இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக எடுத்து வந்து வெளியிட்டவர் சிகந்தர் ஹயாத் கான் )

அந்த அளவிற்கு சுதந்திர வேட்கை குறித்தும் ஆங்கிலேய எதிர்ப்பு குறித்தும் அவர் எழுதியிருந்தார் , முகலாய மன்னரும் , முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேர்ந்து பாரதத்தின் மாமன்னர் என்று பட்டம் சூட்டி கொண்டாடிய பகதூர் ஷா சபர் , மௌலவி அகமது ஷா , பேகம் ஹஸ்ரத் மஹால் போன்ற இஸ்லாமிய போராளிகள் குறித்தும் அவர் விரிவாக எழுதியிருந்தார் . நாட்டின் மாமன்னர் முகலாய மன்னர் பகதூர் ஷா சபர் நாட்டை இணைக்கும் சக்தியாக முதல் சுதந்திர போராட்டத்தின் ஊக்கமளிக்கும் சக்தியாக திகழ்ந்தார் என்று விவரிக்கிறார் .

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அந்த நாட்களை இவ்வாறு விவரிக்கிறார் “

” The five days during which Hindus and Mahomedans proclaimed that INDIA was their country and they were all brethren , the days when Hindus and Mahomedans unanimously raised the flag of National Freedom at Delhi . Be those grand days ever memorable in the history of Hindhusthan “

Ref : V.D.Savarkar . The_Indian_War_of_Independence . http://savarkar.org/…/the_indian_war_of_independence_1857_w…

இந்த புத்தகத்தின் நான்காவது தொகுப்பை பகத் சிங் வைத்திருந்தார் என்பதை விவரிக்கிறார் G.M.Joshi , ” The story of this History ‘ , in V D Savarkar , The Indian War of Independence of 1857 (Bombay : Phoneix Publications , 1947 , p .xvi

பகத் சிங் உருவாக்கிய இயக்கமான Hindusthan Socialist Republican Assosciation (HSRA) வைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களிடமும் சாவர்க்கரின் புத்தகம் இருந்தது

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

சாவர்க்கரின் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகத்தை ராஷ் பிஹாரி போஸ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானில் பிரிண்ட் செய்து வெளியிட்டனர் , நேதாஜியின் இந்திய தேசிய படையின் பப்லிசிட்டி ஆபிசர்களில் ஒருவரும் தமிழருமான ஜெயமணி சுப்ரமண்யம் தமிழாக்கம் செய்து வெளியிட்டார் .

சாவர்க்கரின் தத்துவங்களை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் விருப்பம் , அதே சமயத்தில் அவர் யார் என்பதை பற்றி படித்து தெரிந்துக் கொண்டு அதன் பின்னர் விமர்சிப்பது தான் அறிவார்ந்த செயல்

  • கிஷோர் கே. ஸ்வாமி

Related articles

Recent articles

spot_img