கோலிவுட் or கோழைவுட்?

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
cinema theatre - 2026

தமிழ் சினிமா மாதிரி ஒரு பேடிகள் நிறைந்த கூட்டம் உலகத்தில் எங்கும் இருக்காது. “ஸ்டார்ட் ஆக்க்ஷன்” சொன்னதும் வீரம் காட்டி கோடிகளை கல்லா கட்டும் ஹீரோக்கள், “எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டிக் கேப்பேன்” போன்ற பஞ்ச் டயலாக் பேசி விரல் மடக்கி மிரட்டல் விடும் மாஸ் ஹீரோக்கள், இப்பொழுது ஒரு அரசியல்வாதி “அவிழ்த்து போட்டு நடிக்கும் நடிகை” என்று பொதுவாகவும் ஒரு சக நடிகையையும் கேவலமாக பேசியது கண்டும் விரல் சூப்பும் சிறுவர்களாய் மாறிப்போனர்.

மூத்த நடிகர் மற்றும் அரசியல்வாதி, கமலஹாசனின் மனைவியர்/துணைவியார் எல்லாமே நடிகைகள் தான். இவரது இரண்டு மகள்களுமே நடிகை. எங்கோ ஏதோ அநியாயம் நடந்தால் கண்கள் உருட்டி கட்டைக்குரலில் பேசி, TVயை உடைத்து கோபம் காட்டுபவர். ஆனால் திருமாவின் கேடுகெட்ட பேச்சுக்கு இதுவரை மூச்சே விடவில்லை. இவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதபட்சத்தில் திருமாவின் பேச்சை ஆதரிக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமாவைப் பற்றி அவருக்கு தெரியாததா?

இன்னொருவர் இப்பொழுது தான் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். சக நடிகைகளுக்கு துணை நிற்காமல் போனதற்கான வாழ்நாள் சாதனையும் சேர்த்தே அங்கீகரிக்கப்படட்டும்.

chinmayee - 2026

சூர்யாவின் மனைவி நடிகை. திரையில் சிங்கமென கர்ஜித்தவர். அவரும் இந்த அசிங்கமான அரசியல்வாதி சொல்லும் “அவிழ்த்துப் போட்டு நடிக்கும் நடிகை” என்ற கூற்றை எதிர்க்கவில்லையென்றால் ஜோதிகாவே கோபப்படுவார் என்றே நினைக்கிறேன்.

பெண்கள் முன்னேற்றம் பற்றி படம் எடுத்த ஒரு விரல் புரட்சி செய்தவர், கை சூப்பும் பழக்கம் உடையவர் என்று நினைக்கத் தோன்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையென்றால்.

இவர்களில் ஒருவராவது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் கோலிவுட் எனும் பெயரை கோழைவுட் என மாற்றி வைத்துக்கொள்ளட்டும். பொருத்தமாக இருக்கும்.

Gayathri Raguram - 2026

சின்மயி, இப்போது காயத்ரி ரகுராம் என ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கும் இந்த சாதிவெறி கூட்டத்தை புறக்கணிப்பதே மானமுள்ள தமிழர்கள் செய்ய வேண்டியது.

அறிவை அவிழ்த்துப்போட்டு விட்டு கண்டமேனிக்கு பேசும் திருமாவுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நீ இருப்பது இரும்புக்கோட்டை அல்ல. வாணலி மீது இருக்கிறாய். கீழே சூடு வைக்க ஆரம்பித்தாகிவிட்டது. நீ குதிப்பது இயற்கையான எதிர்விளைவு. உங்கள் கூட்டம் கேள்வியெனும் தீயில் கருகிப்போவது உறுதி.

-ச. சண்முகநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.