
சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி நடப்பதாக தி.மு.க., தலைவர் ‘சர்வாதிகாரி’ ஸ்டாலின் கூறினார்.
சென்னை திமுக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவரை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான அவசரச் சட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக தேர்தல் நடத்துவதன் மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி நடக்கிறது. திமுக., ஆட்சியில் அரசியல் சூழ்நிலை காரணமாக மறைமுகமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினோம். உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது.
மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது கண்டிக்கத் தக்கது. மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவையில் பேசப்படவில்லை என ஓ.பி.எஸ் கூறினார். ஓ.பி.எஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் ஸ்டாலின்.




à®®à¯à®±à¯à®ªà®•ல௠செயின௠பிறà¯à®ªà®•ல௠விளையà¯à®®à¯ அபà¯à®ªà®©à¯ செயà¯à®¤à®¤à¯ மகன௠தலையிலà¯
தனà¯à®©à¯ˆ கொடà¯à®™à¯à®•ோலன௠எனà¯à®±à¯ கூறிய மகனà¯