ஒரு சமூகப் போராளிக்கு… வீடு கூடவா இந்த சமூகம் தராது..? நல்லா இருக்குது நியாயம்?

Published:

piyushmanush arrest - 2026

“அந்த வீட்டில் யாருமே குடியிருக்க முடியாது .. நான்கு லட்ச ரூபாய் வரை அந்த வீட்டிற்கு செலவு செய்துள்ளோம் .. இறந்து போன நபரிடம் தான் நாங்கள் வாடகை ஒப்பந்தம் செய்து உள்ளோம்.. இப்போது வாடகை கேட்கும் அவரது மனைவியிடம் அல்ல… எங்கள் குழந்தைகளின் படிப்பு முடியும் மூன்று வருடம் வரை வீட்டை மாற முடியாது எனக் கூறுகின்றோம் ..”

வீட்டு வாடகை தராமல் வீட்டு உரிமையாளர் பெண்மணியை இழிவுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலி சமூக ஆர்வலர் பீயூஷ் மனுஷின் மனைவி பேட்டி..

நல்லா இருக்குதா நியாயம்?

1) 2017இல் வாடகை ஒப்பந்தம் முடிந்த வீட்டை 2020லும் காலி செய்ய முடியாதாம்…
2) இறந்துபோன மனிதரிடம் வாடகை ஒப்பந்தம் போட்டதால்… இறந்து போனவரின் மனைவி வாடகை கேட்க கூடாதாம்..
3) வாடகை வீட்டிற்கு நான்கு லட்ச ரூபாய் வரை பராமரிப்பு செலவு செய்தாராம்..
4) பிள்ளைகளின் படிப்பு முடியும் மூன்று ஆண்டுகள்வரை காலி செய்ய முடியாதாம்.. அடுத்து பிள்ளைகளின் கல்யாணம் முடியும் 10 ஆண்டுகள் வரை காலி செய்ய முடியாது எனக் கூறலாமா?

நல்லா இருக்குதா நியாயம்?
கடைசியாக ஒரு கேள்வி

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சமூக ஆர்வலர் என்பவர் சமூகத்திற்கு நல்லது செய்பவர்.. சமூகத்தால் நன்மதிப்பைப் பெற்றவர் .. சமூகத்தால் மரியாதையுடன் பாராட்டி கௌரவிக்கப்படுகின்ற நபர்.. அப்படி ஒருவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு தர இந்த சமுதாயத்தில் ஆள் இல்லையா?

மோடி வெறுப்பைப் பேசும் பீயூஸ் மனுசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டத்தில் ஒருவருக்கு கூடவா பீயூஸ் மனுசுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து கொடுக்க முடியவில்லை ..

பியூஸ் மனுஷ் ஏதோ தேவ தூதனை போல ஊடகங்களில் காட்டும் … பேட்டியை திரும்பத் திரும்ப காட்டி நீதிமானை போல பிரபலப்படுத்தும் ஊடகவியலாளர்களால் கூடவா ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து கொடுக்க முடியவில்லை …

மாட்டார்கள் ஏனென்றால் தெரியும்…போலி சமூக ஆர்வலர்களின் லட்சணம் ..

Related articles

Recent articles

spot_img