spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனை30 கேள்விகள்... கருத்து சுதந்திரக் காவலர்களுக்கு! ஜோதி... மணி... ரசிகர்களுக்கு!

30 கேள்விகள்… கருத்து சுதந்திரக் காவலர்களுக்கு! ஜோதி… மணி… ரசிகர்களுக்கு!

ramaravikumar

நியூஸ்7 தொலைக்காட்சி நேரலை _கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் ஜோதிமணி பேசும் போது “மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் களத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தான் நாட்டு மக்கள் பிரதமரை “கல்லால் அடிக்காமல்” இருக்கிறார்கள் என்று பேச நெறியாளர் நெல்சன் சேவியர் வன்முறையை தூண்டும் படியாக பேச வேண்டாம் என்று உதட்டளவில் கண்டித்துவிட்டு “தோழமை நொட்டுதல்” செய்கிறார்

பாஜக கரு நாகராஜன், ஜோதிமணி “நாடாளுமன்ற உறுப்பினரா? இல்லை “மூன்றாந்தர பொம்பளையா?” என்று கருத்து முன்வைக்கிறார். உடனே பின்னால் மிளகாய் வைத்து தாங்க முடியாதவன் போல நெல்சன் சேவியர் “தனி மனித தாக்குதல்” வேண்டாம் நாகராஜன். உங்கள் வார்த்தையை திரும்ப பெறுங்கள் என்று சொல்லுகிறார்.

130 கோடி மக்களின் தலைவர்; தனிப்பெரும்பான்மை பெற்ற பாரதப் பிரதமர் மோடி குறித்து பேசும்போது நெல்சன் சேவியருக்கு “உடலும் உள்ளமும்” மகிழ்கிறது. தனிமனித தாக்குதல் அப்பொழுது தெரியாது . அதே நேரத்தில் எதிர்வினை தாக்குதல் நடத்தினால் தனிமனித தாக்குதல் என்று உபதேசம்.

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பழக்க தோஷத்தில் ஊடக விவாதத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறார். (பாராளுமன்றம் விடுமுறை அதனால் அவர்தான் என்ன செய்வார்)!! உடனே கூட்டணிக் கட்சியை சேர்ந்த சக தோழி கரூர் ஜோதிமணியும் கலாநிதி சொல்கேட்டு வெளியேறுகிறார்.

ஜோதிமணிக்கு ஆதரவாக “நான் ஜோதிமணி யுடன் இருக்கிறேன்” என்று திருமாவளவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், சுப.வீரபாண்டியன் ,தமிழன் பிரசன்னா போன்றோர் பலர் ஆதரவுக் குரல் எழுப்ப ஜோதிமணி அம்மையார் சந்தோசத்தில் மிதக்கிறார்.

“ஆளூர் ஷாநவாஸ்” ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டாரா? என்பது சரியாக தெரியவில்லை. திமுக “சாக்கடை பேச்சாளர்கள்” தலைவர் வழியிலே எப்படி எல்லாம் பெண்களை கேவலப்படுத்தி பேசி இருக்கிறார்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம் முடிந்தால் அவர்கள் பதில் சொல்லட்டும்.

 1. திமுக கட்சி ஆரம்பித்தது மணியம்மை ஈவேரா திருமணத்தில் தான். திருமணத்தால் குழந்தை பிறக்கும். ஆனால் இங்கே “பொருந்தாத'” திருமணத்தால்” “திமுக” பிறந்தது. ஈவேரா குறித்து அண்ணா பேசியது எல்லாம் வரலாறாக இருக்கிறது அதை விவாதிக்கலாம்.
 1. அண்ணாதுரை “அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல; நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல. என்று பெண்மையை போற்றினார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற தத்துவத்தை இந்த தமிழினத்திற்கு தந்து திமுக.
 1. உரலுக்கு சேலை கட்டி வைத்தாலும் உற்றுப் பார்க்கக் கூடிய உன்னதமான கொள்கையை உடன்பிறப்புகளுக்கு தந்தது திமுக.
 2. கவிஞர் கண்ணதாசன் “வனவாசம்” புத்தகத்தில் சொல்கிறார். “விபச்சாரி வீட்டுக்கு சென்றாலும் கூட அவளிடம் காசு வாங்கி வந்த “தமிழின தலைவர்”?? குறித்து பேசுகிறார். இதுவரை எந்த மறுப்பும் இல்லை.

5.”அப்பன் வருவான்; பிள்ளை வருவான் தப்பென்று தள்ளாதே தங்கமே “!
என்று விபச்சார வீட்டிற்கு செல்லும் தத்துவத்தை தரணிக்கு தந்தது யார்?

6. ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் பலி ஆனபிறகு ஜெயந்தி நடராஜன் ராஜீவ் காந்தியின் உடல் இதுதான் என்று அடையாளம் காட்டியது உலகறியும்!
ராஜீவ் காந்தியின் “உடல் “ஜெயந்தி நடராஜனுக்கு தான் தெரியுமென்று கிண்டல் செய்து பேசிய “பெண்டாளன்” யார்?

 1. எங்கே திராவிட நாடு? என்று அனந்த நாயகி காங்கிரஸ் பிரமுகர் கேட்டபொழுது “பாவாடை” எடுத்து “நாடாவை” அவிழ்த்து பாருங்கள் அங்கே தெரியும் திராவிட நாடு என்று “இரு பொருளில்” ஆபாச வார்த்தையில் அர்த்தம் சொன்னது யார்?
 2. காங்கிரஸ் தலைவி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது “மண்டையில்” “ரத்தம்” சொட்டச் சொட்ட வந்தார்.
  இது “மண்டையில் இருந்துவரும் ரத்தம் அல்ல; பெண்களுக்கு மாதம் வரும் ரத்தம்” என்று கிண்டல் செய்து பேசிய “பெண்ணுரிமை காவலர்” யார்?
 3. காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜெயலலிதா சந்திப்பையும் போயஸ் கார்டனில் நடந்தது என்ன? என்று பொதுவெளியில் கூறாத மர்மமென்ன? என்று அடுக்குமொழி வசனம் பேசிய “அயோக்கியத்தனமான” பெண்ணுரிமை காவலர் யார்?
 4. பண்டாரநாயகா இலங்கை அதிபர் இந்திரா இந்திய பிரதமர் இருவர் சந்திப்பு குறித்தும், “பண்டார நாயகா அவர் மனைவியை இழந்தவர்; இந்திராகாந்தியை கணவரை இழந்தவர்” என்று பெண்ணுரிமைக்காக போற்றி புனிதம் காத்த புனிதர் யார்?

11. விதவை மறுவாழ்வு திட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது அதிலே வேண்டுமானால் உதவி பென்சன் பெறட்டும் என்று இந்திரா காந்தியின் புகழ் பாடிய “திமுகவின் தோழன்” யார்?

12. ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்று பள்ளிக்கூடங்கள் திறந்த கர்மவீரர் காமராசரை “கருவாட்டுக் காரி மகன்” என்றும் ,எருமை தோலை தான் ஏற்றுமதி செய்வார்கள் இப்பொழுது எருமை மாட்டையே ரஷ்யாவிற்கு அனுப்புகிறோம் என்று கிண்டல் செய்து பேசிய “கள்ளக்குடி” பிறப்பு யார்?

 1. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் சேலையை பிடித்து இழுத்து, பெண்களை அசிங்கப்படுத்திய கேடு கெட்டவன்யார்.? சாட்சிக்கு வேண்டுமானால் திமுகவில் இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் , காங்கிரஸில் இருக்கும் இன்றைய எம்பி திருநாவுக்கரசரையும்கேட்டுப்பாருங்கள்!

14. நன்னிலம் நடராசன், வெற்றிகொண்டான் ,தீப்பொறி ஆறுமுகம் தொடங்கி…….. இன்று இருக்கும் “தமிழன் பிரசன்னா” வரை இப்படி “சாக்கடை பேச்சாளர்”
களை மேடைகளில் ஏற்றி “ஆபாச வார்த்தைகளால் அரசியல் தலைவர்களை, வேகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்யக்கூடிய கேடான தத்துவத்தை தமிழ் மண்ணிற்கு தந்த பெண்கள் விரோத கட்சி எது ?
அந்தக் கட்சியின் தலைவர் யார்?

 1. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதா சந்திப்பை “தனிப்பட்ட” முறையில் சந்தித்து அவர்கள் என்ன செய்தார்கள் செய்து கொண்டிருப்பார்கள். இருவருமே வயதானவர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பிய, கேலி பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பது விந்தையாக இருக்கிறது!

16.காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி “உயரமாக” இருக்கிறார். “பாவம் கஷ்டம்” என்று என்ன அர்த்தத்தில் சொன்னார்? என்று அவருக்குத்
தான் தெரியும்.என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய லட்சணம் அது.

17. நடிகை குஷ்பு குறித்து திமுகவும் காங்கிரசும் மாறிமாறி சொல்லிய குற்றச்சாட்டுகளைச் சொன்னால் பெண்ணுரிமை காத்த லட்சணம் உலகத்திற்கு தெரிய வரும்.

 1. நடிகை குஷ்புவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவும் ஊர்ஊராக போராட்டம் நடத்தி ஓடவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்ன பெண்ணுரிமை இலட்சணம் இந்த உலகம் அறியும்.
 2. பெண்ணுரிமை காக்க குரல் கொடுக்கும் பெண்ணுரிமை போராளிகளே கவிதா என்கின்ற ஒரு பெண்மணி தோழமை சுட்டுதல் நபரை குற்றம் சுமத்தி வந்து வீடியோ உங்கள் கண்ணில் எல்லாம் படவில்லையா அவருக்கு உங்கள் ஆதரவை காட்டாதது ஏணோ?
  “ஓ! கவிதா_ கோவை” உங்கள் பார்வையில் பெண்மணி இல்லையா?

20. மதுரை லீலாவதி கொலைக்கு காரணமான கட்சியோடு கூட்டு வைத்து, எம்பி பதவி வாங்கி, கட்சியை அடமானம் வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், “பெண்ணுரிமை காக்க வேண்டும்” என்று குரல் கொடுப்பது லீலாவதிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

21. “தோழமை சுட்டுதல்”செய்து தயாநிதிமாறனுக்கு வக்காலத்து வாங்கிய, விடுதலை சிறுத்தை திருமாவளவன் அவர்கள்; நடிகை காயத்ரி ரகுராம் குறித்து என்ன பேசினார்? பெண்களை வைத்து தொழில் செய்து ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள தறகுறிகளுக்கு என்ன தெரியும்? “அவிழ்த்துப் போட்டு ஆடைகளை அகற்றி நடிப்பது அவர்களுக்கு தொழில்! எனவே அவர்களுக்கு எதிராக போராடுவது வீண்! விரல் கொண்டு நசுக்கும் எறும்பை வேல் கொண்டு தாக்கலாமா? என்று “எழுச்சிதமிழர்” “பெண்ணிய காவலர்” பெண்ணியத்தை போற்றிய தருணத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

22. நடிகை நயன்தாரா குறித்து பேசிய ராதாரவி கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுக்க வைத்த உதயநிதி போன்றவர்களெல்லாம் ஜோதிமணிக்கு ஆதரவாகவும்,பாஜக வுக்கு எதிர்ப்பாகவும் பேசும் போது எதை வைத்து சிரிப்பது என்றே தெரியவில்லை!

 1. தமிழன் பிரசன்னா போன்ற “சாக்கடை பேச்சாளர்கள்” ஜோதிமணிக்கு ஆதரவாக ஆஜராவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
  “இனம் இனத்தோடு” சேர்கிறது.
 2. தோழர் தியாகு தன்னை ஏமாற்றி விட்டார் என்று “கவிஞர்” தாமரை முறையிட்டபோது, தியாகுவுக்கு குரல் கொடுத்து கட்டப்பஞ்சாயத்து பேர்வழி போல கருத்து தெரிவித்த, சுபவீ போன்றவர்கள் கரூர் ஜோதிமணிக்கு ஆதரவாக பேசும் போது, கரு.நாகராஜன் போன்ற “அநாகரிக” பேச்சாளர்களை ஊடகங்களில் அனுமதிக்கக்கூடாது. ஏன் கைது செய்யவில்லை என்று வயிறு எரிந்து பேசும் போதே தெரிகிறது. இந்த திமுகவின் ஊதுகுழலை ஒருவரும்கண்டுகொள்ளவில்லை !என்பது.
  இவருக்கு தற்போதைய தேவை “ஜெளுசில்” மருந்து. ஓ! கவிஞரின் பெயர் “தாமரை” என்று இருந்ததால் எதிர் நிலை எடுத்து, தோழர் தியாகுவுக்கு தியாககரம், ஆதரவுக்கரம் நீட்டினாரோ சுபவீ செட்டியார்!
 3. கரூரில் தன்னை இடுப்பை கிள்ளி விட்டார் திமுக பிரமுகர் என்று குற்றம் சுமத்திய பெண்மணி நீதி கேட்ட போது , “இடுப்பு கிள்ளியவனை கட்சியில் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்மணியை கட்சியை விட்டு நீக்கிய பெண்களை போற்றும் புனித கட்சி அல்லவா “இடுப்பு கிள்ளி திமுக”

27. கடந்த 10 தினங்களுக்கு முன்பு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் “பெண்” என்றும் பாராமல் ஆணவத்தோடு, அதிகரிப்பதோடு, மிரட்டி “பாஸ்” வாங்கிய சம்பவம். இந்த உலகம் மறந்து விடவில்லை. இதையே ஒரு அதிமுக காரர் செய்திருந்தால், பாஜக செய்திருந்தால், எப்படியெல்லாம் ஊடகங்களும், இந்த திமுக உள்ளவர்களும் “ஊதுகுழல்”களும்_ “பொங்கி” இருப்பார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

28. தமிழக பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவருடைய உடல் மொழிகள் குறித்தெல்லாம் சாக்கடை பேச்சாளர்களை வைத்து திமுகவினர் பேசிய பேச்சுகளை யாரும் மறந்து விடவில்லை நீங்களும் மறுக்க முடியாது.

 1. தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் பணிகளை மேற்பார்வையிட சென்ற பொழுது செல்லுமிடமெல்லாம் கருப்புக்கொடி காண்பித்து, நீங்கள் அதன் உச்சமாக கடலூரில் பெண்மணி குளித்துக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்து விட்டார் என்று பொய் புகார் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்த
  “திமுக கும்பல்” பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
 2. பாரதப் பிரதமர் குறித்தும் தேசபக்தர்கள் குறித்தும், இந்து மதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வரும் “கருவின்குற்றம் பரம்பரை” பேர்வழிகளுக்கு இந்தக் கேள்விகளை முன் வைத்திருக்கிறேன்.

தொடர்ந்து உங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு எதிர்வினை உங்கள் வார்த்தைகள் போன்றே வரும்.

நாகரீகம் என்ற பெயரில் ஒதுங்கிச் சென்றால் சாக்கடைகளில் புரண்ட பன்றிகள் போல பேசும் இந்த “சாக்கடை பேச்சாளர்களுக்கு” யானை மீதி ஒன்றுதான் தக்க பதிலடியாக அமையும். தேவையில்லாமல் எங்களுக்கு நாகரீக அரசியல் பாடம் எடுத்தால் தலையில் இருக்கக் கூடியதை வாயால் சொல்லி திட்ட வேண்டி வரும்;! யாரும்” மயிர்” என்று நினைக்க வேண்டாம்!

 • ராம ரவிக்குமார்
  இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe