எல்லோரும் விரும்பும் மாம்பழ குல்ஃபி!

சமையல் புதிது
mango kulfi
mango kulfi

மாம்பழ குல்ஃபி

தேவையானவை:
பால் – ஒரு லிட்டர்,
சர்க்கரை – 200 கிராம்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
மாம்பழக் கூழ் – ஒரு கப்,
மேங்கோ எசன்ஸ் – சில துளிகள்,
மஞ்சள் ஃபுட் கலர் – 2 சிட்டிகை, ஒன்றிரண்டாக பொடித்த பிஸ்தா, பாதாம், முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்,
குல்ஃபி மோல்டு (அச்சு) – தேவைக்கேற்ப.

செய்முறை:
பாலைக் கொதிக்க விட்டு, ஏடு படியாமல் கிண்டி, அரை லிட்டராக குறுக்கவும். இத்துடன் சர்க்கரை, மாம்பழக் கூழ், சிறிதளவு தண்ணீரில் கலக்கிய சோள மாவு சேர்த்து கொஞ்சம் சூடுபடுத்தி, அடுப்பை அணைக்கவும். பிறகு மேங்கோ எசன்ஸ், ஃபுட் கலர், பிஸ்தா, பாதாம், முந்திரி சேர்த்துக் கலக்கவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, குல்ஃபி அச்சுகளில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். குல்ஃபி கெட்டியானதும், அதில் ஐஸ் குச்சியை செருகி சாப்பிடக் கொடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.